இந்திய பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் தான் ராதிகா மெர்ச்சன்ட். என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் தான் ராதிகா மெர்ச்சன்ட், இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.
படிப்பை முடித்தது பல பணக்கார தொழிலதிபர்கள் குடும்பத்தைப் போலவே வீரேன் மெர்ச்சன்ட்-ம் தனது மகளை வர்த்தகத் துறையில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக மருந்து நிறுவனமான என்கோர் ஹெல்த்கேரின் நிர்வாகக் குழுவில் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

ராதிகா மெர்ச்சன்ட் 2017 இல், தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் Isprava Groupல் பணியில் சேர்ந்தார், இது ஒரு ஆடம்பர ஹாலிடே ஹோம் டெவலப்பர் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் நாதிர் கோத்ரேஜ், ஆனந்த் பிரமல் மற்றும் டாபர் இந்தியாவின் பர்மன் குடும்பம் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்.
ராதிகா மெர்ச்சன்ட் தனது பள்ளிப் படிப்பை மும்பையின் புகழ்பெற்ற கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி மற்றும் எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் முடித்தார். மேலும் ராதிகா மெர்ச்சன்ட் பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார், இவர் குரு பாவனா தாக்கரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் ராதிகா மெர்ச்சன்ட்டின் அரங்கேற்றம் விழாவை அம்பானி குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். ராதிகா மெர்ச்சன்ட் சுமார் 8 ஆண்டுகளாகப் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு அமீர் கான், கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், சகாரிகா காட்கே, ரன்வீர் சிங் மற்றும் சல்மான் கான் எனப் பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். பரதநாட்டியம் மட்டுமின்றி, மலையேற்றம், நீச்சல் போன்றவற்றிலும் அவருக்கு ஆர்வம் உண்டு.
வீரேன் மெர்ச்சன்ட்டின் நிகர மதிப்பு சுமார் ரூ.755 கோடி. ஆனால் அவரின் மகளான ராதிகா மெர்ச்சன்ட்டின் நிகர மதிப்பு சுமார் ரூ.10 கோடி மட்டுமே.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை முடித்தார் மற்றும் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிரீன் எனர்ஜி வர்த்தகத்தை வழிநடத்துகிறார்.
மேலும் அவர் ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் போன்ற இணை நிறுவனங்களின் பல துணை நிறுவனங்களில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.


Click it and Unblock the Notifications