இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு மருமகளாகி இருக்கிறார் ராதிகா மெர்ச்சன்ட். கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. இதில் திரை துறையைச் சேர்ந்த பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் தற்போது ராதிகா மெர்ச்சன்ட், ராதிகா அம்பானியாக வலம் வருகிறார்.
அம்பானி குடும்பத்தில் சேர்ந்த பிறகு ராதிகா தனது தொழில், பயணம் மற்றும் எதிர்கால லட்சியங்கள் குறித்து என்டர்பிரனர் இந்தியாவுக்கு அளித்த முதல் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த நேர்காணலில் தனது தந்தை வீரேன் மெர்ச்சன்ட் ஆரம்பித்த என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து பல்வேறு விஷயங்களை ராதிகா மெர்ச்சன்ட் பகிர்ந்திருந்தார். இந்தியாவின் தெற்கு பகுதி முழுவதும் தங்களுடைய நிறுவனத்தின் தடையத்தை வலுப்படுத்தவும், உயர்தர சுகாதாரப் பொருட்கள் நாடு முழுவதும் எளிதாக கிடைக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மார்க்கெட்டிங் செய்யவும் உறுதியாக இருப்பதாக ராதிகா தெரிவித்திருந்தார்.
ஆரம்ப வாழ்க்கையின் படிப்பினைகள்: ராதிகாவின் மிகச்சிறந்த தலைமைத்துவ அணுகுமுறை அவருடைய தந்தை வீரேன் மெர்ச்சன்ட் மூலம் கிடைத்துள்ளது. ஆரம்ப காலத்தில் மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவாக தனது கரியரை ராதிகா தொடங்கியுள்ளார். "ஒரு நிறுவனத்தின் விற்பனையை உங்களால் சரிவர நிர்வகிக்க முடிந்தால் அங்கு வழங்கப்படும் எந்த வேலையை வேண்டுமானாலும் உங்களால் பார்க்க முடியும் என்று தன்னுடைய முதல் பாஸ் கூறியதாக பகிர்ந்துள்ளார்.
ஏனெனில் விற்பனை என்பது தயாரிப்பு, விநியோகம், நிதி ஆகியவற்றின் நுணுக்கங்களை கற்றுக் கொண்டால் மட்டுமே கையாள முடியும். மேலும் உங்கள் வாடிக்கையாளர்களுடன் மிகவும் நெருக்கமாக செயல்படுவதற்கு சரியான அணுகுமுறை அவசியம் என்று ராதிகா கூறியிருக்கிறார்.
சகோதரி அஞ்சலி மெர்ச்சன்ட் மஜிதியாவின் நுண்ணறிவு: அதே நேர்காணலில் தனது மூத்த சகோதரியான அஞ்சலி மெர்ச்சன்ட் மஜிதியா குறித்தும் ராதிகா பேசியிருந்தார். என்கோரின் சர்வதேச சந்தைகளுக்கான அதிகாரியாக இருக்கும் அஞ்சலி, உலகளவில் என்கோர் நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்து வருகிறார். என்கோரை மருந்து துறையில் முன்னணி நிறுவனமாக மாற்றுவதற்கு சுமார் 20 நாடுகளில் இருப்பை கொண்டு செல்வதே தனது லட்சியம் என்றும் பகிர்ந்து கொண்டார்.
பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: ராதிகா அம்பானி சமீபத்தில் தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பையில் உள்ள ஆன்ட்டிலியா இல்லத்தில் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சூழப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கேக் வெட்டும் விழா இடம் பெற்றது. அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் இன்ஃப்ளேன்ஸராக இருக்கும் ஓரி மூலம் பகிரப்பட்டது.
மேலும் ராதிகா அம்பானி தன்னுடைய கணவரான ஆனந்த் அம்பானி தனது மாமனார் முகேஷ் அம்பானி தன்னுடைய பெற்றோர்களான ஷைலா மற்றும் வீரேன் போன்றவர்களுக்கு கேக் ஊட்டும் வீடியோவும் பகிரப்பட்டிருந்தது. மேலும் ஜான்வி கபூர், ரன்வீர் சிங், அனன்யா பாண்டே, மற்றும் சுஹானா மற்றும் ஆர்யன் கான் போன்ற பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications