ராதிகா மெர்ச்சன்ட்டின் மேக்அப் கலைஞரான லவ்லீன் ராம்சந்தனி தனது இன்ஸ்டாகிராமில் அம்பானி குடும்பத்துடன் ஒரு மறக்கமுடியாத தருணத்தைப் பகிர்ந்துள்ளார்.
மார்ச் 6 அன்று ஜாம்நகரில் ரிலையன்ஸ் ஊழியர்களுக்காக நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி வழங்கிய சிறப்பு இரவு விருந்துக்குப் பிறகு, ராதிகா மெர்ச்சன்ட், இஷா அம்பானி, ஷ்லோகா மேத்தாவுடன் லவ்லீன் ராம்சந்தனி படம் எடுத்துக் கொண்டார்.

மூவரும், ஒரு சோபாவில் ஒன்றாக அமர்ந்து, அவர்களுக்கு மத்தியிலான அரவணைப்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்தினர். இஷா அம்பானி இரட்டை நிற புடவையில் வசீகரித்தார். ஷ்லோகா மேத்தா நிறைந்த அலங்கார வேலைப்பாடுகளுடனான புடவையில் பார்ப்பவர்களை திகைக்க வைத்தார்.
ஷ்லோகா மேத்தா, அவரது கணவர் ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர் ஆனந்த் மற்றும் ராதிகாவுடன் போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்தனர். அனைவரும் சிரித்தபடி மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்ட படங்கள் இதயத்தைக் கவர்வதாக உள்ளன.
ஷாரூக் கான், சல்மான் கான், ஜான்வி கபூர், ரன்வீர் சிங் போன்ற நட்சத்திரங்கள் ஜாம்நகருக்கு ரிலையன்ஸ் விருந்தில் பங்கேற்றதால் கொண்டாட்டங்கள் அனைத்தும் கோலாகலமாகத் தொடர்ந்தன.
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்துக்கு முந்தைய விழாக்களில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. இது அனைவருக்கும் உண்மையிலேயே மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது.
Story Written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications