குஜராத்: முகேஷ் அம்பானியின் இளைய மருமகளாக போகும் ராதிகா மெர்சண்டின் பிரைடல் ஷவர் நிகழ்வின் புகைப்படங்கள் பற்றி தான் சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்டிற்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்சண்டும் காதலித்து வந்தனர், இந்நிலையில் இரு குடும்பத்தினரும் இதனை ஏற்றுக் கொண்டு கோலாகலமாக நிச்சயதார்த்தை நடத்தினர்.

கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் இவர்களின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலகெங்கிலும் இருந்து பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். உலகமே மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை உற்று நோக்கியது. பெரிய தொழிலதிபர்கள் தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஜூலையில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அண்மையில் ராதிகா மெர்சண்டின் பிரைடல் ஷவர் நிகழ்ச்சி வண்ணமயமான முறையில் அரங்கேறி இருக்கிறது. பிரின்சஸ் டெய்ரீஸ் தீமை அடிப்படையாக கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு ஒரு கனவுலகமே கண் முன் கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
பிங்க் மற்றும் பர்பிள் நிறங்களை அடிப்படையாக கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அது தவிர பிரம்மாண்ட விருந்தும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது. ராதிகா மெர்சண்டின் பிரைடல் ஷவர் நிகழ்ச்சியில் அவரது சகோதரியான அஞ்சலி மெர்சண்ட், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், இயக்குனர் சௌனா கௌதம் மற்றும் நெருங்கிய நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ப்ளோரா இந்தியா என்ற நிறுவனம் இதற்கான அலங்காரங்களை செய்தது. இந்த வீடியோவை அந்த நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த பிரைடல் பார்ட்டியில் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி மற்றும் மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த புகைப்படங்களை நடிகை ஜான்விகபூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மணப்பெண் தோழிகள் அனைவரும் பிங்க் நிற ஆடையும் மணப்பெண்ணான ராதிகா மெர்ச்சண்ட் வெள்ளை நிற ஆடையும் அணிந்திருந்தார். சமூக வலைத்தளங்களில் தற்போது இந்த புகைப்படங்கள் தான் தீயாய் பரவி வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications