அனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண முன்வைபோகத்தின் இரண்டாம் நாள் இன்று. முதல் நாள் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக குஜராத்தின் ஜாம்நகரில் தொடங்கியது.
நாடெங்கும் மற்றும் உலகெங்கும் இருந்து ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்காக ஜாம்நகருக்கு வந்துள்ளனர்.
முதல் நாள் நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் வெர்சேஸ் பிராண்ட் (Versace) ஆடையை அணிந்திருந்தார். An Evening in Everland என்ற தீமில் எலிகண்ட் காக்டைல் டிரஸ் கோடு வகுக்கப்பட்டிருந்தது.

கனமான எம்பிராய்டரி மற்றும் மெட்டாலிக் வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்ட பிங்க் ஸ்ட்ராப்லெஸ் உடையை ஹாலிவுட் நடிகர் பிளேக் லைவ்லி 2022 இல் மெட் காலா ஆடையை தேர்ந்தெடுத்து அணிந்திருந்தார்.
அம்பானி மருமகள் ராதிகா பொருந்தக்கூடிய காதணிகளுடன் கூடிய பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் வெள்ளை மற்றும் மஞ்சள் வைர நெக்பீஸைத் தேர்ந்தெடுத்தார். மேக்கப் ரோஸ்-கோல்டு தூக்கலாக இருந்தது.

அனந்த் ஒரு கருப்பு நிற உடையில் ராதிகாவுக்கு பொருத்தமாகக் காட்சியளித்தார். இதற்கிடையில், மெட் காலாவில் தனது வெர்சேஸ் ஆடையுடன் இளஞ்சிவப்பு நிற சாடின் கையுறைகளை பிளேக் லைவ்லி அணிந்திருந்தார்.
உலகப் புகழ்பெற்ற பாப் இசை பாடகி ராபியின் ரிஹானாவின் இசை நிகழ்ச்சி முதன் முறையாக இந்தியாவில் நேற்று நடைபெற்றது.
ஷாரூக்கான் முதல் மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் வரை, டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் முதல் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் வரை, பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண முன்வைபோக நிகழ்ச்சியைக் கொண்டாட வந்தனர்.

பில் கேட்ஸுடன் அவரது பார்ட்னர் பாவ்லா ஹர்டும் வந்திருந்தார். அனந்த் அம்பானி, முகேஷ் அம்பானியுடன் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜஸிம் அல் தானியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்களில் ஒருவர். எம்மார் ப்ராபர்டீஸ் நிறுவனர் முகமது அலபார் தனது காமெஸ் அலபாருடன் வந்திருந்தார்.
இத்துடன் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா தனது மகள் அரபெல்லா ரோஸ் கணவர் ஜாரெட் குஷ்னருடன் வந்திருந்தார்.
தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவு எம்பி பிரபுல் படேல் தனது மனைவி வர்ஷா படேலுடன் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா சிஇஓ ஆதார் பூனவாலா தனது மனைவி நடாஷா பூனவாலாவுடன் வந்திருந்தார். அவர்கள் அணிந்திருந்த ப்ளோடி அடெலியர் டிசைனர் டிரஸ் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.
இத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷி தோனியுடன் கண்கவரும் கருப்பு ஆடையில் தோன்றி அசத்தினர்.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு முந்தைய விழாக்கள் மார்ச் 1 முதல் தொடங்கி மார்ச் 3 வரை நடைபெறும். இந்த ஜோடி இந்த ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Story Written by: I. Jayachandran


Click it and Unblock the Notifications