இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி-யின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் அவரது ஆசை காதலியும், வைர வியாபாரி வீரேன் மெர்ச்சன்ட் மகளான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
இவர்களது திருமணத்திற்கு முன்னதாக ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடைபெற்றது. இது அவர்களது இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டமாகும். அம்பானி வீட்டுக் கொண்டாட்டம் குறித்துச் சொல்லவே தேவையில்லை, நவராத்திரி, தீபாவளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி என அனைத்து பண்டிகைகளையும் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவது வழக்கம்.

இதில் அம்பானியின் இளைய வாரிசின் திருமணம், மொத்த குடும்பமும் கொண்டாடித் தீர்க்கின்றனர். 2 நிச்சயதார்த்த விழா, 2 திருமண முன் வைபோக கொண்டாட்டம், அடுத்தது திருமணம் என தடல் புடலாக நடக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடந்த நிகழ்ச்சிகள் மிகவும் பிரைவேட் ஆக நடைபெற்றது. அழைப்பு விடுக்கப்பட்ட பிரபலங்களுக்கும் கூட போன் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொண்டாட்டங்களின் ஒவ்வொரு புகைப்படமும் வெளியாகி வருகிறது.

இந்த விழாவில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக இருந்தது, ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த கவுன் ஆகும். லண்டனை தலைமையிடமாகக் கொண்ட டிசைனர் ராபர்ட் வன் (Robert Wun) என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த கருப்பு கவுனில், ராதிகாவுக்கு ஆனந்த் அம்பானி தனது 22 வயதில் அவருக்கு எழுதிய காதல் கடிதம் மொத்தமாக அச்சிடப்பட்டிருந்தது.
பிரபல ஆடை டிசைனர் ராபர்ட் வன் தயாரித்து சொகுசு கப்பலில் ராதிகா அணிந்திருந்த கருப்பு கவுன், வெள்ளை நிற ஷிஃபான் துணியால் ஆனது.
"என் பிறந்தநாளுக்காக அவர் எனக்கு நீண்ட காதல் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் என்னைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார்," என்று ராதிகா வோக் (Vogue) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

"இந்த காதல் கடிதத்தை நான் என்றென்றும் பத்திரமாக வைத்திருக்க விரும்பினேன். நான் என் குழந்தைகளுக்கும், பேரன் பேத்திகளுக்கும் இதைக் காட்டி, 'இதுவே எங்கள் காதல்' என்று சொல்ல விரும்பினேன்" என்று அவர் மேலும் கூறினார். ராதிகா முதல் முறையாக ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியாகும்.
இந்த க்ரூஸ் விழாவிற்குக் கேட்டி பேரி (Katy Perry), டேவிட் குட்டா (David Guetta), பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் (Backstreet Boys) மற்றும் ஆண்ட்ரியா பொசெல்லி (Andrea Bocelli) ஆகிய பிரபல பாடகர்கள் இந்த நான்கு நாள் விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு இசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.

ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் (Jio World Convention Centre) பிரமாண்ட வளாகத்தில் மூன்று நாட்கள் திருமண விழாக்கள் நடைபெறவுள்ளன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications