இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரிது லக்ஷ்மி விலாஸ் அரண்மனை. லக்ஷ்மி விலாஸ் அரண்மனை குஜராத்தில் உள்ளது, பரோடாவின் கெய்க்வாடுகளுக்கு இந்த அரண்மனை சொந்தமாகும். இது உலகிலேயே மிகப் பெரிய தனியார் குடியிருப்பாகும்.
குறிப்பிடத்தக்க சரித்திர சிறப்பு வாய்ந்த இந்த அரண்மனை பரோடாவை ஒருகாலத்தில் ஆண்டு வந்த கெய்க்வாடுகளுக்குச் சொந்தமானது.

உள்ளூர் மக்கள் இந்த அரண்மனை மீது இப்போதும் மிகுந்த மரியாதையை வைத்துள்ளனர். தங்களது பாரம்பரியச் சின்னமாக லக்ஷ்மி விலாஸ் அரண்மனையை அவர்கள் கருதுகின்றனர். தற்போது ஹெச்ஆர்ஹெச் சமர்ஜித்சிங் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி ராதிகாராஜே கெய்க்வாட் பொறுப்பில் இந்த அரண்மனை உள்ளது.
சுமார் 3,04,92,000 சதுர அடி பரப்பளவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனை 8,28,821 சதுர அடியில் அமைந்துள்ளது. லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் 170 அறைகள், ஒரு கோல்ப் மைதானம் உள்ளிட்டவை அடங்கும்.
முகேஷ் அம்பானியின் உலகின் மிக விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றான ரூ.15,000 கோடி மதிப்புள்ள 48,780 சதுர அடியில் அன்டிலியா அமைந்துள்ளது.

மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் இந்த அரண்மனையை 1890 சதுர அடியில் 1,80,000 பிரிட்டன் பவுண்ட் செலவில் அமைத்தார். குஜராத்தின் வான்கனேர் பகுதியில் 1978 ஜூலை 19 ஆம் தேதியன்று ராதிகாராஜே கெய்க்வாட் பிறந்தார். அவரது தந்தை டாக்டர் எம்கே ரஞ்சித்சிங் ஜாலா தனது அரசு பட்டத்தைத் துறந்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரியாக ஆனார்.
ராதிகராஜே கெய்க்வாட், வாசிப்பு மற்றும் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் இந்திய வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2002 இல் மகாராஜ் சமர்ஜித் சிங் கெய்க்வாட்டை திருமணம் செய்வதற்கு முன்பு, அவர் ஒரு பத்திரிகையாளராக பணியாற்றினார்.
2012 இல், லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் நடந்த ஒரு பாரம்பரிய விழாவில் பரோடா கிரீடம் சமர்ஜித் சிங் கெய்க்வாட்க்கு அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் லக்ஷ்மி விலாஸ் அரண்மனை சமர்ஜித் சிங் வசம் ஆனது. தற்போது அவரும் அவரது மனைவி ராதிகாராஜே கெய்க்வாட்டும் இதில் வசித்து வருகின்றனர்.
500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த அரண்மனை இன்று வரை கட்டப்பட்ட மிகப் பெரிய தனியார் குடியிருப்பாகும். குஜராத்தில் உள்ள மிகவும் கவர்ச்சிகரமான மன்னர் கால அரண்மனை, அதன் விரிவான உட்புறங்கள் நன்கு பராமரிக்கப்பட்ட மொசைக்குகள், சரவிளக்குகள் மற்றும் கலைப்படைப்புகள், அத்துடன் ஆயுதங்கள் மற்றும் கலைகளின் மிகவும் ஈர்க்கக்கூடிய தொகுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய தனியார் குடியிருப்பு என்ற பெருமையுடன் லக்ஷ்மி விலாஸ் அரண்மனை விளங்குகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications