நடுத்தர குடும்பங்களுக்கு விடிவுகாலம்.. Joint Tax Filing முறை.. மத்திய அரசு முடிவு என்ன..?!

இந்தியாவில் வருமான வரி அமைப்பில் குடும்பங்களை மையமாகக் கொண்ட புதிய மாற்றம் தேவைப்படுவதாக நாடாளுமன்றத்தில் புதிய விவாதம் எழுந்துள்ளது. திருமணமான தம்பதிகள் ஒன்றாக இணைந்து வருமான வரி தாக்கல் செய்யும் 'Joint Filing' என்ற முறையை விருப்பத் தேர்வாக அதாவது Optional ஆக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற யோசனையை நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா முன்வைத்துள்ளார்.

இது நடைமுறைக்கு வந்தால், குடும்பங்களில் வருமானம் சமமாக பகிரப்படாத சூழ்நிலைகளில் ஏற்படும் வரி சுமை குறைக்க வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினரான ராகவ் சத்தா பொதுமக்கள் தினசரி எதிர்கொள்ளும் மூன்று முக்கிய பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் நேற்றை கூட்டத்தில் முன்வைத்து, அதற்கான நடைமுறை மாற்றங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நடுத்தர குடும்பங்களுக்கு விடிவுகாலம்.. Joint Tax Filing முறை.. மத்திய அரசு முடிவு என்ன..?!

மூன்று முக்கிய கோரிக்கைகள்
பட்ஜெட் கூட்டத் தொடரில் மேல்சபையில் பேசிய அவர், திருமணமான தம்பதிகளுக்கு விருப்பத் தேர்வாக கூட்டு வருமான வரி தாக்கல் (Joint Filing) முறையை அறிமுகப்படுத்த வேண்டும், காயமடைந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மாற்றுத் திறனாளி ஓய்வூதியத்தில் முழு வரி விலக்கு வழங்க வேண்டும், மற்றும் குறைந்தபட்ச இருப்பு இல்லாததால் வங்கி கணக்குகளில் விதிக்கப்படும் அபராதங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்த மூன்று பிரச்சனைகளும் கோடிக்கணக்கான இந்தியர்களை நேரடியாக பாதிப்பதாகவும், சமநிலை கொண்ட, மனிதநேயமிக்க பொருளாதார அமைப்பை உருவாக்க மத்திய அரசு உடனடியாக கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதில் அனைவராலும் கவனிக்கப்பட்டது கூட்டு வருமான வரி தாக்கல். இதுகுறித்து ராகவ் சத்தா டிவிட்டரில் தனிப்பட்ட பதிவையும் செய்துள்ளார்.

Also Read

குடும்ப வருமானம் - வரி சுமை
நாடாளுமன்ற உரையை விளக்குவதற்காக ராகவ் சத்தா டிவிட்டரில் இரண்டு குடும்பங்களை எடுத்துக்காட்டாக கூறி சாமானிய மக்களுக்கு தனது கோரிக்கையை தெளிவுப்படுத்தினார்.

முதல் குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் தலா ரூ.10 லட்சம் சம்பாதிக்கிறார்கள். இவர்களின் மொத்த குடும்ப வருமானம் ரூ.20 லட்சம் ஆக உள்ளது. தற்போதைய வரி விதிப்பின் கீழ் இவர்கள் செலுத்த வேண்டிய வரி பூஜ்ஜியமாக இருக்கலாம்.

ஆனால் இரண்டாவது குடும்பத்தில் கணவன் ரூ.20 லட்சம் சம்பாதிக்கிறார். மனைவி குழந்தையை வளர்ப்பதற்காக வீட்டிலேயே இருக்கிறார். இங்கும் குடும்பத்தின் மொத்த வருமானம் ரூ.20 லட்சம் தான். இருப்பினும் சுமார் ரூ.1.92 லட்சம் வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது, காரணம் கணவனின் மொத்த சம்பளத்தில் அதிக வரி சுமை உள்ளது.

இரண்டு குடும்பங்களின் மொத்த வருமானமும் ஒரே அளவு இருந்தாலும், வருமானம் எவ்வாறு கணவன் - மனைவிக்குள் பகிரப்பட்டுள்ளது என்பதற்கேற்ப வரி சுமை மாறுகிறது என்பது தான் ராகவ் சத்தா கோரிக்கையின் மையப்புள்ளி.

Recommended For You

'குடும்பம்' இல்லாத வரி அமைப்பு
இந்திய வருமான வரி அமைப்பு தனிநபரை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. அதாவது கணவன் மற்றும் மனைவி இருவரும் தனித்தனியாக வரி செலுத்தும் நபர்களாகவே கருதப்படுகிறார்கள்.

ஒரே வீட்டில் வசித்து, ஒரே சமையலறையை பயன்படுத்தி, ஒரே குடும்ப செலவுகளை பகிர்ந்தாலும் வரி கணக்கிடும் போது அந்த குடும்பம் இரண்டு தனி நபர்களாக பிரிக்கப்பட்டு பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ஒருவர் அதிகமாக சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக வரி சுமை ஏற்படுகிறது. குழந்தைகளை பராமரிக்க அல்லது வீட்டுப் பொறுப்புகளை ஏற்க ஒருவர் வேலை செய்யாமல் இருப்பது போன்ற சூழ்நிலைகளில் இந்த பிரச்சனை வரி சுமையாக மாறுகிறது என ராகவ் சத்தா விளக்கினார்.

You May Also Like

'Joint Filing' திட்டம்
இந்த நிலையை மாற்றுவதற்காகவே திருமணமான தம்பதிகள் இணைந்து வருமான வரி தாக்கல் செய்யும் 'Joint Filing' முறையை விருப்ப தேர்வாக அறிமுகப்படுத்த வேண்டும் என ராகவ் சத்தா பரிந்துரைத்துள்ளார்.

இந்த முறையில் கணவன் மற்றும் மனைவியின் வருமானம் ஒன்றாக சேர்த்து குடும்ப வருமானமாக கணக்கிடப்படும். அதன் அடிப்படையில் வரி விதிக்கப்படும்.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால் முன்பு எடுத்துக்காட்டாக கூறப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கும் ஒரே அளவிலான வரி விதிப்பு இருக்கும். அதாவது இரண்டிலும் வரி சுமை குறையும் வாய்ப்பு உள்ளது என அவர் விளக்கினார்.

ராகவ் சத்தா யார்?
ராகவ் சத்தா ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினராகவும், தேசிய செய்திதொடர்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

மேலும் அவர் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் (Chartered Accountant) என்பதால் வரி அமைப்புகள் மற்றும் நிதி கொள்கைகள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்திய வரி அமைப்பில் இது சாத்தியமா?
திருமணமான தம்பதிகளுக்கான Joint Filing முறை பல நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் குடும்ப அடிப்படையிலான வரி தாக்கல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் இதுபோன்ற மாற்றம் கொண்டு வரப்பட்டால் குடும்ப வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு வரி கணக்கிடும் புதிய கட்டமைப்பு உருவாகும்.

நடுத்தர குடும்பங்களுக்கு விடிவுகாலம்.. Joint Tax Filing முறை.. மத்திய அரசு முடிவு என்ன..?!

பொருளாதார தாக்கம்?
இந்த யோசனை நடைமுறைக்கு வந்தால் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பல்வேறு விளைவுகள் உருவாகலாம்.

முதலாவது, வீட்டில் ஒருவர் மட்டுமே சாம்பாதிக்கும் நபராக இருந்தால் குடும்பங்களுக்கு வரி சுமை குறையும். குழந்தைகளை வளர்க்க அல்லது குடும்பத்தை கவனிக்க ஒருவர் வேலை செய்யாமல் இருப்பது போன்ற சூழ்நிலைகளில் இது லாபகரமாகவும், நிதி சுமையை குறைக்கும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இரண்டாவது, குடும்ப வருமானத்தை மையமாகக் கொண்ட வரி அமைப்பு உருவாகும் பட்சத்தில், இது நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு பெரிய நிதி நிவாரணத்தை வழங்கலாம்.

ஆனால் இதே நேரத்தில் அரசின் வரி வசூல் வருமானத்தில் சரிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஏனெனில் அதிக வருமானம் உள்ள ஒரே நபரை கொண்ட குடும்பங்கள் குறைந்த வரி செலுத்தும் நிலை உருவாகலாம். இதனால் இந்த யோசனை நடைமுறைக்கு வர வேண்டுமெனில் வரி கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் தேவைப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+