இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரகுராம் ராஜன். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தவர் மட்டும் அல்லாமல் மோடி அரசின் பல்வேறு செயல்பாடுகளை விமர்சனம் செய்தவர்.
இந்தியா வலுவான பொருளாதார வளர்ச்சியில் இருப்பதாகக் கூறுவதன் மூலம் இந்தியா மிகப் பெரிய தவறை செய்வதாக ரகுராம் ராஜன் இப்போது கூறியுள்ளார்.

நாட்டில் நிலவும் மிகப் பெரிய அடிப்படைப் பிரச்னைகளை தீர்த்தால்தான் அதன் வலிமையை ஏற்படுத்த முடியும் என்று அவர் ப்ளூம்பெர்க் இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்துவது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது என்றும் உழைக்கும் வர்க்கத்தின் திறனையும் அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மிகப் பெரிதாக சாதித்து விட்டதாக நினைப்பது இந்தியா செய்யும் மிகப் பெரிய தவறு. அந்த சாதனையை எட்டுவதற்கு நாம் இன்னும் பல ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.
சாதித்துவிட்டதாக உங்களை நம்ப வைப்பதற்காக அரசியல்வாதிகள் கூறுவதெல்லாம் தங்களை உயர்த்திக் கொள்வதற்காக. இதை நம்புவது இந்தியாவுக்கு மிகப் பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும்.
2047 ஆம் ஆண்டு வரை இந்தியா வளர்ச்சியடைந்த பொருளாதார நிலையை அடைய முடியாது. உங்கள் குழந்தைகள் நல்ல தரமான கல்வியைப் பெறாதவரையும், படிப்பை கைவிடும் சதவீதம் அதிகமாக இருக்கும்வரையிலும் இந்த இலக்கை அடைவதாக நினைப்பது முட்டாள்தனம்.
நம்மிடம் உழைக்கும் வர்க்கம் அதிகரித்து வருகிறது, ஆனால் நல்ல வேலை கிடைத்தால்தான் இது பலன் தரும். என்னைப் பொருத்தவரை இதுதான் நாம் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னையாகும்.
கொரோனா காலத்துக்குப் பின்னர் பள்ளிக் குழந்தைகளின் கற்கும் திறன் 2012 ஆம் ஆண்டுக்கு முந்தைய அளவில் குறைந்துள்ளது.
இந்தியா தனது உழைக்கும் வர்க்கத்தினரை அதிக வேலையில் அமர்த்தும் வகையில் உருவாக்க வேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கு நல்ல வேலையைத் தர வேண்டும்.
அவர்களது எண்ணிக்கை நமக்கு கவலையைத் தருகிறது. குறைந்த மனித வளம் என்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு நம்மிடையே இருக்கும்.
அரசு, கல்வித் திட்டத்தை சரி செய்வதற்கு பதிலாக சிப் உற்பத்தியில்தான் அதிக கவனத்தை செலுத்துகிறது.
இந்தியாவை சிறந்த தேசமாக ஆக்கவேண்டும் என நினைக்கும் அரசின் நோக்கம் உண்மையானது. ஆனால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கிறதா என்பது கேள்வியாக உள்ளது.
நாம் பெருமை தரும் திட்டங்களில் ஆழ்ந்து இருப்பது கவலையைத் தருகிறது. சிப் உற்பத்தி துறையை நிலையாக ஆக்குவதற்குத் தேவையான பிரச்னைகளை களைவதற்கு பதிலாக பெரிய சாதனை உணர்வுடன் இருக்கிறோம்.
நடைமுறைக்கு சாத்தியமான அணுகுமுறை நமக்குத் தேவை. சீன முன்னாள் அதிபர் ஒரு முறை கூறினார். பூனை கருப்பாக இருப்பதோ வெள்ளையாக இருப்பதோ முக்கியமில்லை. அதனால் எலியை வேட்டையாட முடியுமா என்பதுதான் முக்கியம். இதைத்தான் நாம் சீனாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாகும் என்றார் ரகுராம் ராஜன்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications