கொரோனா வைரஸ் பரவலானது அரசாங்கங்களுக்கு சவாலாக இருக்கும் இந்த நேரத்தில், வைரஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக நிறுவனங்கள் மற்றும் மக்களை நம்ப வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வைரஸ் பரவுவதற்கு ஒரு வரம்பு உள்ளது என்பதை மக்கள் உணர விரும்புகிறார்கள். ஏனெனில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாகவோ அல்லது ஒரு வித தீர்வைக் காணலாம் என்ற நம்பிக்கை இருப்பதால் அப்படி உணரலாம் என்றும் ப்ளூம்பெர்க் ராஜன் கூறியுள்ளார்.

இந்த கட்டத்தில் அரசாங்கம் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், பின்னர் வரும் பொருளாதார தூண்டுதல் நடவடிக்கைகளை எதிர்த்து போராடுவதை விட, பரவி வரும் தொற்று நோயை எதிர்த்து போராடுவது தான் சிறந்த வழி என்றும் ராஜன் கூறியுள்ளார்.
மேலும் இந்த கொடிய வைரஸ் பரவுவது உலகப் பொருளாதாரத்தை இன்னும் மோசமாக்குகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் பேங்க் ஆப் அமெரிக்காவின் பொருளாதார வல்லுனர்கள் இந்த ஆண்டு உலகளாவிய வளர்ச்சியை 2.8% ஆக கணித்துள்ளனர். இது கடந்த 2009ம் ஆண்டு முதல் ஒப்பிடும்போது தற்போது தான் வீழ்ச்சி கண்டுள்ளது.
சந்தைகள் மீதான தீவிர நம்பிக்கையில் இருந்து தற்போது, நாம் தீவிர பீதிக்கு நகர்ந்துள்ளோம். அதிலும் இவை அனைத்தும் ஒரு வார இடைவெளிக்குள் நகர்ந்துள்ளது என்றும் ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் ராஜன் மேற்கோளிட்டுள்ளார்.
மேலும் வைரஸ் வெடிப்பு நிறுவனங்களுக்கு வினியோகச் சங்கிலிகளுக்கு மற்றும் வெளிநாட்டு உற்பத்தி வசதிகளை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில் கொரோனா வெடிப்பு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் உலக சுகாரதார அமைப்பு கூறியுள்ளது.
சீனாவில் நிலைகொண்டுள்ள இந்த வைரஸால் இதுவரை 2,788 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியமும் சர்வதேச பொருளாதாரம் சரியும் என கூறியுள்ளது. ஏனெனில் சர்வதேச அளவில் கொரோனாவால் உற்பத்தி மோசமாக பாதிக்கப்படலாம் என்று ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதன் தாக்கம் இன்னும் அதிகரித்தால் உலகப் பொருளாதாரம் என்னவாகுமோ? சொல்லப்போனால் இந்திய பொருளாதாரமும் இன்னும் மோசமாகலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications