இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், தான் RBI கவர்னர் பதவியில் இருந்தபோது பெற்ற சம்பளம், சலுகைகள் குறித்து மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்திய பொருளாதார வளர்ச்சி பாதையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய முக்கியமான பணியில் இருப்பவருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்..? உங்கள் யூகம் என்ன..?
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் பலராலும் பாராட்டப்படும் நபராக இருந்தாலும், பலரும் விமர்சனம் செய்யும் நபராக இருந்து வருகிறார். மோடி பிரதமராக வந்த பின்பு ரகுராம் ராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரகுராம் ராஜன் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது தான் RBI கவர்னர் பதவியில் இருந்தபோது பெற்ற சம்பளம், சலுகைகள் குறித்து மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இந்தப் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ரகுராம் ராஜன் பேசிய போது, என்னுடைய சம்பளத்தை விட ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருப்பவர்களுக்கு அரசு ஒதுக்கும் அதிகாரப்பூர்வ இல்லம் தான் பெரிய சலுகை என்று கூறினார்.
யூடியூபர் ராஜ் ஷமானியுடன் 'ஃபிகரிங் அவுட்' போட்காஸ்டில் பேசிய ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகத் தான் பணியாற்றிய போது ஆண்டுக்கு ரூ.4 லட்சம் தான் சம்பளம் என்று கூறினார்.
"தற்போதைய சம்பளம் என்னவென்று எனக்குத் தெரியாது, ஆனால் என்னுடைய பதவிக் காலத்தில் வருடத்திற்கு ரூ.4 லட்சமாக இருந்தது. இந்தப் பதவியில் இருப்பது மூலம் கிடைத்த மிகப்பெரிய சலுகை வீடு. மும்பையில் உள்ள மலபார் ஹில்லில் உள்ள திருபாய் அம்பானியின் வீட்டில் இருந்து சில பிளாக்குகள் தள்ளி உங்களுக்கு ஒரு பெரிய வீடு கிடைக்கும்," என்று அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கி ஆளுநரின் சம்பளமாக ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் என்பது பொருத்தமான தொகையா என்று கேள்விக்கு, ரகுராம் ராஜன் இந்தச் சம்பளம் மற்ற அரசு அதிகாரிகளுக்கு இணையானதாகும் என்று ராஜன் கூறினார்.
இந்தச் சம்பளம் கேபினட் செயலாளருக்கு இணையாக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் அரசு அதிகாரிகள் பெறும் மற்ற சலுகைகள் ஆர்பிஐ பதவியில் இருப்பவர்களுக்குக் கிடைக்காது. உதாரணமாக ஓய்வூதியம் கிடைக்காது, ஆனால் உங்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் என்று அவர் போட்காஸ்ட் பேட்டியின் போது கூறினார்.
பொதுவாக ஆர்பிஐ கவர்னர் பதவியில் இருப்பவர்கள் பொது பணியாளர் அதாவது civil servant பிரிவு அதிகாரியாகத் தான் இருப்பார்கள், இதனால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பென்ஷன் civil servant பிணியில் இருந்து கிடைத்துவிடும். ஆனால் civil servant அல்லாதவர் ஆர்பிஐ கவர்னராக இருந்தால் இப்பதவியில் இருப்பவர்களுக்குப் பென்ஷன் இல்லை.
ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து விலகிய ராஜன், மீண்டும் தனது பழைய கல்லூரி பணிக்கு திரும்பினார். ரகுராம் ராஜன் தற்போது சிகாகோ பூத் கல்லூரியின் சிறப்புமிக்க நிதிப் பேராசிரியராக உள்ளார்.
சம்பளம், வீட்டை தாண்டி, ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருப்பவர்களுக்குத் தினசரி பயன்பாட்டுக்குக் கார் மற்றும் வீட்டை மெயின்டெயின் செய்ய வசதிகளும் கொடுக்கப்படும்.
தற்போது ஆர்பிஐ கவர்னராக இருக்கும் சக்திகாந்த தாஸ் மாதம் 2.50 லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெறுகிறார். இதில் 1.60 லட்சம் ரூபாய் அடிப்படை சம்பளம் மற்றவை பல்வேறு கொடுப்பனவுகள் பிரிவில் வருகிறது.
ஆனால் ஆர்பிஐ இணையத்தளத்தில் வெளியான தகவல் படி ரகுராம் ராஜன் அடிப்படை ஊதியம் ரூ.90,000, அகவிலைப்படி ரூ.1 லட்சம் மற்றும் மாதத்திற்கு ரூ.7,000 இதர கொடுப்பனவுகள் உட்பட ரூ.1.98 லட்சம் மொத்த சம்பளம் பெற்றார் எனக் கூறப்பட்டு உள்ளதாக டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இதேபோல் தி சன்டே கார்டியன் வெளியிட்ட தகவல் படி ரகுராம் ராஜன் தனது பொருட்களை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கும், 3 வருட பணி காலத்திற்குப் பின் தனது பொருட்களை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கும் கொண்டு வர ஆர்பிஐ சுமார் 71 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது என ஆர்டிஐ பதில் மூலம் பெறப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications