டெல்லி: நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுக்க பரவி வரும் இந்த நிலையில், சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இதன் பாதிப்பு தற்போது இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி, வளர்ச்சியைக் குறைக்கும் மதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்துள்ளன.
வளர்ச்சி கணிப்பு குறைப்பு
இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக பிட்ச் மதிப்பீடு வெளியீடு, முன்னர் அறிவித்த 5.6% என்ற இந்தியாவின் வளர்ச்சியை 5.1% ஆக குறைத்துள்ளது. இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற கணிப்பில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைக்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
S&P நிறுவனம் என்ன கணித்துள்ளது?
இதே போல் S&P நிறுவனம் முன்னர் கணித்திருந்த 5.7% வளர்ச்சியை 5.2% ஆக குறைத்துள்ளது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள், தங்களின் முதலீடுகளை தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியே எடுத்துச் செல்வது, இந்தியாவின் வளர்ச்சியினை மிக மோசமாக பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரகுராம் ராஜன் என்ன சொல்கிறார்?
இப்படி இந்திய பொருளாதாரம் ஏற்கனவே பலத்த அடி வாங்கி வரும் நிலையில், தற்போது கொரோனாவின் உக்கிர தாண்டவத்தில் இருந்து எப்படி பொருளாதாரத்தினை பாதுகாத்து கொள்ள என்ன செய்யலாம் என ரிசர்வ வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் என்ன கூறியுள்ளார். என்ன கூறியுள்ளார் வாருங்கள் பார்க்கலாம்.
வீழ்ச்சி கண்ட வணிகங்களுக்கு கடன்
கொரோனாவின் மூலம் சிக்கித் தவிக்கும் இந்தியா பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, கொரோனாவின் தாக்கத்துக்கு பின்பு நோய்வாய்ப்பட்ட வணிகங்களுக்கு கடன் வழங்குவதே மிக முக்கியமான தேவையாக இருக்கும். இருப்பினும் இந்திய பொருளாதாரத்தில் தற்போதுள்ள பின்னடைவு காரணமாக, ரிசர்வ் வங்கி இந்த சந்தர்ப்பத்தில் உதவ முடியுமா என்று தெரியவில்லை.
பலவீனமான நிதி அமைப்பு
நம்மிடம் பலவீனமான நிதி அமைப்பு தான் உள்ளது. அது தேவைக்கேற்ப செயல்பட வேண்டும். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அது அப்படி செயல் பட முடியுமா எனத் தெரியவில்லை. இதனால் ரிசர்வ் வங்கி வணிகங்களை ஆதரிக்கும் விதமாக கடன் ஆதரவை வழங்க முடியாது என்றும் அவர் இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
சரி இதற்கு என்ன தான் தீர்வு? சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதே சமயம் வங்கிகள் ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பதால், வங்கிகளுக்கும் சில சலுகைகள் அளிக்கப்பட வேண்டும். இதனால் வங்கிகள் இதனை எளிதில் செயல்படுத்த வழிவகுக்கும். இது பணப்புழக்கத்தை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அரசு கவனமுடன் செயல்பட வேண்டும்
மேலும் இந்த காலகட்டத்தில் பணப்புழக்கத்தினை எளிதாக்குவதன் மூலம் சற்று பிரச்சனையை சற்று எதிர்கொள்ள முடியும். இது உலக வங்கிகளிடம் இருந்து ஒரு குறிப்பினை அரசு எடுக்க வேண்டும். மேலும் வளர்ச்சிக்கு பணப்புழக்கம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஆனால் நம்மிடம் வாராக்கடன் விகிதம் சற்று அதிகமாக இருப்பதால் கவனமாக சிந்திக்க வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
தற்காலிக வருமான திட்டம்
மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது ஏழைகளுக்கு தேவையான தற்காலிக வருமான பரிமாற்ற திட்டத்தினையும் ரகுராம் ராஜன் பரிந்துரைத்தார். எவ்வாறாயினும் அடிப்படை வருமானத்தினை பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இதுவல்ல என்றும் ராஜன் தெளிபடுத்தியுள்ளார். ஏனெனில் முதலில் பணம் மருத்துவ வசதிகளுக்காக செல்ல வேண்டும் என பல விஷயங்களை தெளிபடுத்தியுள்ளார்.
தாக்கம் அதிகமாக இருக்கும்
இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியம் உலகப் பொருளாதாரம் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து கடுமையான பொருளாதாரத்தினை எதிர்கொண்டு வருகிறது. இது கடந்த 2009ம் ஆண்டினை விட அதிகமான தாக்கமாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜூவா திங்களன்று தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாக ஆதரவு வழங்குகள்
இந்த நிலையில் ஜார்ஜூவா மேம்பட்ட பொருளாதாரங்களுக்கு வருமானம் குறைவாக உள்ள நாடுகளுக்கு கூடுதல் ஆதரவை வழங்குமாறு தெரிவித்துள்ளது. இது கடந்த 2008ம் ஆண்டு நிதி நெருக்கடியினால், 2009ல் உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் அந்த நேரத்தில் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வந்தன.
அரசு உத்தரவினை கடைபிடியுங்கள்
ஆனால் தற்போதைய நிலையில் கொரோனாவின் தாக்கத்தினால் உலகப் பொருளாதாரமே தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில் மக்களை பாதுகாக்கவும் மற்றும் பொருளாதாரத்தினையும் கட்டுப்படுத்த அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் ஜார்ஜூவா கூறியுள்ளார். உண்மை தானே நாம் ஒண்றினைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த கொரோனாவை விரட்ட முடியும். பொருளாதாரத்தினையும் மேம்படுத்த முடியும். ஆக இன்று மாலை முதல் அமலுக்கு வரவிருக்கும் 144 தடை உத்தரவினை மக்கள் தவறாமல் கடை பிடித்தாலே நாம் இதிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications