ஒருபக்கம் பங்குச்சந்தையிலும், பத்திர முதலீட்டு சந்தையிலும் செய்யப்படும் முதலீட்டுக்கு லாபம் தாறுமாறாக அதிகரித்தாலும், ஏஐ முதல் உற்பத்தி துறை வரையில் பல பாதிப்புகள் இருப்பத்தாக கணிப்புகள் வெளியாகி வருகிறது. பலரும் எடுத்த நிதி நெருக்கடி நெருங்கிவிட்டது என்ற அளவிலும் பேசி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் உலக அளவிலான தனியார் கடன் சந்தையில் ஆபத்து அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளார்.

தனியார் கடன் சந்தை என்றால் என்ன?
தனியார் கடன் சந்தை என்பது வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நேரடியாக தொழில் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பது. இவை பெரும்பாலும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, வங்கிகள் கொடுக்க முடியாத அல்லது கொடுக்க தயங்கும் கடன்களை வழங்குகின்றன.
2008 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு வங்கிகளுக்கு கடன் வழங்க கடுமையான விதிகள் வந்ததால், இந்தத் தனியார் கடன் சந்தை வேகமாக வளர்ந்தது. இந்தக் கடன்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆகாது என்பதால் ஆபத்து குறைவாக தோன்றினாலும், பொருளாதார அடிப்படையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
தனியார் கடன் சந்தையில் ஏற்படும் பாதிப்பு என்பது ஒரு நிறுவனத்துடன் நின்றுவிடாது என்பதே இதன் முக்கியமான ஆபத்து. ஒரு நிறுவனம் தோல்வி அடைந்தால் அதன் செயின் ரியாக்ஷனாக பல நிறுவனங்கள் அடுத்தடுத்து வீழும். இதனால் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம், பணவீக்கம் என பல கட்டத்தில் இதன் பாதிப்பு இருக்கும்.
ரகுராம் ராஜன் கூறுவது என்ன..?
சிங்கப்பூரில் நடந்த Clifford Capital Investor Day நிகழ்ச்சியில் பேசிய ரகுராம் ராஜன், தற்போது தனியார் கடன் சந்தையில் பணம் அதிகமாக இருப்பதும், அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பது ஆபத்தை அதிகரிப்பதாகக் கூறினார். "பணம் நிறைய இருக்கும் போதுதான் ஆபத்து அதிகமாகும். முதலீட்டாளர்கள் இப்போது மிகக் கவனமாக இருக்க வேண்டிய நேரம்" என்று அவர் வலியுறுத்தினார்.
அதிக பணப்புழக்கம்:
தற்போது தனியார் நிறுவனங்கள் நிறைய லாபம் ஈட்டுகின்றன இதற்கு பின்னால் இருக்கும் காரணம் ஏஐ தொடர்பான முதலீடுகள். AI தொழில்நுட்பத்தில் பல வெற்றிக்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் காரணத்தால், "இன்னும் கடன் கொடுத்தால் லாபம் வரும்" என்ற நம்பிக்கை தனியார் கடன் சந்தையில் அதிகரித்துள்ளது.
இதேவேளையில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பதால் வருவதால் குறைந்த வட்டியில் அதிக பணம் எளிதாக கிடைக்கும். இதனால் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் ஆபத்தை மறந்து அதிக கடன் கொடுக்கின்றன என ரகுராம் ராஜன் கூறினார்.
அமெரிக்காவில் திவால்:
அமெரிக்காவில் சில பெரிய தனியார் நிறுவனக்கள் கடன் வாங்கி திவாலாகியுள்ளன. இது உலக அளவில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அதிகம் பேசப்படவில்லை. ஆனால் ஏஐ துறையில் பபுள் வெடித்தால் கட்டாயம் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தெரிகிறது.
டபிள்லைன் கேப்பிடல் நிறுவனர் ஜெஃப்ரி குண்ட்லாக் "தனியார் கடன் அடுத்த நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம். சில கடன்கள் 'குப்பைக் கடன்' போல உள்ளன" என்று எச்சரித்துள்ளார். ஜேபி மார்கன் தலைவர் ஜேமி டைமன் "வீட்டில் ஒரு கரப்பான் பூச்சி தெரிந்தால், அது ஒன்று மட்டுமல்ல, இன்னும் நிறைய இருக்கும் என்பதை இதன் பொருள்" என்று Private Credit சந்தையை விமர்சனம் செய்துள்ளார். இவர்களின் பேச்சு அனைத்தும் தனியார் கடன் சந்தையில் மறைமுகமாக ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
ஆபத்து:
தனியார் கடன் நிறுவனங்களுக்கு பொதுவாக வங்கிகளைப் போல கடுமையான கண்காணிப்பு கீழ் இல்லை. இவை அனைத்தும் ஆபத்து காரணிகளை கணக்கில் எடுக்காமல் தனது விருப்பத்தின் அடிப்படையில், சொத்த கணிப்பு, கணக்கீட்டின் அடிப்படையில் கடன் அளிக்கிறது.
இத்தகைய நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி, திவாலாகும் பிரச்சனை வந்தால் மத்திய வங்கியிடம் நேரடியாக உதவி கேட்க முடியாது. ஆனால் வங்கிகளிடம் இருந்து கடனோ, பத்திரமோ அல்லது பிணை வாயிலாக கடன் பெறலாம். இத்தகைய சூழ்நிலையில் Private Credit நிறுவனங்கள் திவாலாகும் போது 360 கோணத்திலும் பிரச்சனை வரும்.
ரகுராம் ராஜனும் இதே தான் இந்த நிகழ்ச்சியில் பேசினார், "வங்கிகளுக்கு மத்திய வங்கி உதவி இருக்கும். ஆனால் Private Credit நிறுவனங்களுக்கு மத்திய வங்கிகளின் உதவி இல்லை" என்றார். நெருக்கடி வந்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரித்துள்ளார்.
More From GoodReturns

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

Salary Slip இல்லாமல் லோன் கிடைக்குமா? இந்த ஆவணங்கள் இருந்தால் ஈஸியா லோன் வாங்கலாம்!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications