2 வயது குழந்தைக்கு 250 கோடி ரூபாய் வீடு.. அதிர்ஷ்டம்ன்னா இதுதான்பா..!

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தங்களது பாரம்பரிய பங்களாவை மகள் ராஹா பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்பீர் கபூர். இவரும் முன்னணி நடிகையான ஆலியா பட்டும் கடந்த 2022 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்தாண்டில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு ராஹா கபூர் என பெயர் சூட்டியுள்ளனர். இந்த குழந்தைக்கு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தங்களது பாரம்பரிய பங்களாவை எழுதி வைக்க ரன்பீர் கபூர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ளது கிருஷ்ண ராஜ் பங்களா. ரன்பீர் கபூரின் தாத்தா பாட்டிக்கு சொந்தமானது இந்த பங்களா. அவர்களுக்கு பின்னர் இந்த பங்களா ரன்பீர் கபூரின் பெற்றோருக்கு எழுதி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பாரம்பரியமிக்க இந்த பங்களாவை மகள் பெயரில் எழுதி வைக்க ரன்பீர் கபூர் முடிவு செய்துள்ளார். இதன் மதிப்பு 250 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பாலிவுட்டிலேயே அதிக சொத்து மதிப்பு மிக்க குழந்தையாக இந்த குழந்தை மாற இருக்கிறது.

தற்போது வீட்டில் உள்ள சில பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன .ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் தம்பதிகள் அவர்களுக்கு ஏற்ற வகையில் வீட்டில் சில மாற்றங்களை செய்து வருகின்றனர்.

இது முடிவடைந்த உடன் சொத்தை தங்களது மகள் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு அங்கேயே குடிபெயர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கு பாந்த்ரா பகுதியில் நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன . வற்றின் மொத்த மதிப்பு 60 கோடி ரூபாய் ஆகும். இருப்பினும் பாரம்பரிய வீட்டில் மகள் வளர்வதையே இவர்கள் விரும்புகின்றனராம்.

2 வயது குழந்தைக்கு 250 கோடி ரூபாய் வீடு.. அதிர்ஷ்டம்ன்னா இதுதான்பா..!

ஷாருக்கான், அமிதாப் பச்சன் போல ஒரு சொகுசு வீட்டை கட்ட வேண்டும் என ரன்பீர் கபூருக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்து வருகிறது. தற்போது கிருஷ்ண ராஜ் பங்களாவை அதற்கு ஏற்ற படி சீரமைத்து வருகின்றனர்.

தற்போது வீடானது ரன்பீரின் தாய் நீது கபூரின் பெயரில் இருக்கிறது. அதனை பேத்தி பெயருக்கு மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வீட்டின் சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் நீது கபூர், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் ராஹா கபூர் ஆகியோர் ஒன்றாக இந்த வீட்டில் வசிக்க உள்ளனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+