டெல்லி : நாட்டில் தற்போதுள்ள நிலை மிக பயமான சூழல் உள்ளதாக பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் பத்திரிக்கையின் விருது வழங்கும் விழா சனிக்கிழமையன்று நடந்தது.
இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டவர்கள் பங்க்கேற்றனர். இவர்கள் தவிர சில தொழிலதிபர்களும் பங்கேற்றனர்.
அச்சம் நிலவி வருகிறது
இந்த விழாவில் பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தற்போது இந்தியாவில் மிகவும் பயமான சூழல் நிலவி வருகிறது. அரசினை யாரும் விமர்ச்சிக்க பயப்படுகின்றனர். இதனை யாரும் வெளிப்படையாகவும் கூற முன்வரவில்லை. நான் இதனை வெளிப்படையாகக் கூறுகிறேன். தொழில்துறையில் அச்சம் இருப்பதாகவும் எந்த தொழிலதிபரும் அதை பகிரங்கமாக சொல்ல மாட்டார்.
திறம்பட நடவடிக்கை இல்லை
எனினும் மோடி அரசு திறம்பட நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் ராகுல் பஜாஜ் விமர்சித்தார். இதே ராகுல் பஜாஜ் பற்றி மற்றொரு தொழிலதிபர் கூறுகையில், ராகுல் பஜாஜை பற்றி அறிந்தவர்கள் அவர் அச்சமற்றவர்கள் என்று தான் கூறுவார்கள். அரசின் மோசமான நடவடிக்கைகளுக்கு கூட எப்போதும் பாராட்டும் தொழிலதிபர்களைப் போல் அவர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சவாலான தருணங்கள்
81 வயதான ராகுல் பஜாஜின் 54 ஆண்டுகள் தொழில் முறை கதையும் மிக சுவாரஷ்யமானது. கடந்த ஆண்டு அவர் பிசினஸ் ஸ்டேண்டர்டுக்கு அளித்த பேட்டியில், சவாலான தருணங்கள் உள்ளதாக கூறினார். இப்போதெல்லாம் அவர் அன்றாட வியாபாரத்தில் குறைவாக ஈடுபடுகிறார். எனினும் அவரது ஒவ்வொரு வர்த்தகத்தினையும் அவரது மகன்களான ராஜூவ் மற்றும் சஞ்சீவ் கவனித்து வருகின்றனர்.
தொழில் மீது ஈர்ப்பு கொண்டவர்
ராகுல் 1965ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோவில் இணைந்த போது அகுர்டியில் அதன் ஆலை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அவர் தெற்கு மும்பையில் மிக வசிதியான வாழ்கை வாழ்ந்து வந்த நிலையில், அகுர்குடிக்கு குடிபெயர்ந்தார். அதோடு ஆலை பகுதிகுள்ளேயே ஒரு வீட்டைக் கட்டினார். அவரது குடும்பத்தினரும் அந்த எளிமையான வாழ்க்கையையே பின்பற்றினர். அந்த அளவுக்கு அவரது தொழிலின் மீதும், வேலை மீதும் அக்கறை கொண்டவர் ராகுல் என்றும் கூறப்படுகிறது.
இது யோசிக்க வேண்டிய விஷயம் தான்
இந்த நிலையில் ராகுல் வணிகத்திற்கு வெளியே பல கோணங்களில் உள்ளார். அவர் 2012 வரை நாடாளூமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் 2001லியே பத்ம பூஷன் விருதுக்கு கௌரவிக்கப்பட்டார். இந்த அளவுக்கு பெயர்போன ஒருவர் தொழில் துறையில் சிறந்து விளங்கிய ஒருவர், இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது சற்று வருத்தத்தை அளித்தாலும், கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications