மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திங்கள்கிழமை, பிரதமர் நரேந்திர மோடியை தாக்கி, அதானி நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பின்னரும், பொதுமக்களின் ஓய்வூதிய பணத்தை அதானி நிறுவனங்களில் முதலீடு செய்வது ஏன் என்று கேட்டுள்ளார்.
ட்விட்டரில் ராகுல் காந்தி, "எல்ஐசியின் மூலதனம், அதானிக்கு! எஸ்பிஐயின் மூலதனம், அதானிக்கு! ஈபிஎஃப்ஓ மூலதனமும் அதானிக்கு! 'மோதானி' அம்பலமான பிறகும் பொதுமக்களின் ஓய்வுப் பணம் அதானி நிறுவனங்களில் ஏன் முதலீடு செய்யப்படுகிறது?"
"மிஸ்டர் பிரைம் மினிஸ்டர், எந்த விசாரணையும் இல்லை, பதில் இல்லை! ஏன் இவ்வளவு பயம்" என்று இந்தியில் ஒரு ட்வீட்டில் கேள்வி கேட்டுள்ளார்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம்
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பின்பு அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில் சுமார் 100 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இதன் மூலம் அதானி குழுமத்தில் முதலீடு செய்த ரீடைல் முதலீட்டாளர்கள், அரசு அமைப்புகள், மக்கள் பணத்தை நிர்வாகம் செய்யும் வங்கிகள், அமைப்புகள் என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் முதலீட்டு மதிப்பை இழந்துள்ளனர்.
எல்ஐசி
இந்திய மக்கள் தங்களுடைய பாதுகாப்பான எதிர்காலத்திற்காக எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். எல்ஐசி தன்னிடம் இருக்கும் பணத்தை பல மடங்கு உயர்த்த வேண்டும் என்பதற்காக அதானி குழுமத்தில் சுமார் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சுமார் 21,000 கோடி ரூபாய் தொகை அதானி குழும நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
இந்தியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி அமைப்பான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வகைப்படுத்தப்பட்ட துறையை சார்ந்த சுமார் 27.73 கோடி ஊழியர்களின் EPF சேமிப்புகளை நிர்வகிக்கிறது. EPFO தனது 85 சதவீத பங்குச்சந்தை முதலீட்டை, ETF வாயிலாக நிஃப்டி 50 பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.
NSE நிஃப்டி 50 மற்றும் BSE சென்செக்ஸ்
EPFO கார்பஸ் தொகையில் 15 சதவீதத்தை NSE நிஃப்டி 50 மற்றும் BSE சென்செக்ஸ் உடன் இணைக்கப்பட்ட ETF -களில் முதலீடு செய்து வருகிறது. நிஃப்டி 50 பங்குகள் பட்டியலில் கடந்த செப்டம்பர் மாதம் அதானி எண்டர்பிரைசஸ் சேர்க்கப்பட்டது, அதானி போட்ர்ஸ் & SEZ 2015 செப்டம்பர் மாதத்தில் இருந்து இருக்கிறது.
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போட்ர்ஸ்
இதன் மூலம் EPFO அதானி எண்டர்பிரைசஸ், அதானி போட்ர்ஸ் & SEZ ஆகிய இரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. ஜனவரி 24 ஆம் தேதி ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட அறிக்கை மூலம் அதன் பங்கு மதிப்பில் பெரும் சரிவை சந்தித்த நிலையில், EPFO சிறிய அளவிலான தொகையை மட்டுமே முதலீடு செய்திருந்தாலும் இழப்பு அதிகமாகவே இருக்கும்.
தொடர்ந்து முதலீடு
அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு பின்பும் அதானி குழுமத்தின் 2 நிறுவனத்தில் EPFO முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதை விட முக்கியமாக இந்த முதலீடுகள் EPFO அமைப்பு அதன் டிரஸ்டீஸ் தலையீடு இல்லையெனில் செப்டம்பர் மாதம் வரையில் முதலீடு செய்ய உள்ளதை தான் ராகுல் காந்தி கேள்வி கேட்டுள்ளார்.
ராகுல் காந்தி
இதேவேளையில் இன்று மத்திய அரசு சார்பில் எம்.பி என்ற முறையில் டெல்லியில் ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications