நாடாளுமன்ற கூட்டத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானியை A1 மற்றும் A2 என குறிப்பிட்டு பேசினார். குற்றவாளிகளை குறிப்பிடுவதற்காக இந்த வார்த்தைகள் பயன்படுகிறது. அதாவது ஆங்கிலத்தில் Accused என்ற வார்த்தையின் முதல் எழுத்தைக் குறிப்பிட்டு பேசினார். ராகுல் காந்தி காரசாரமாக பேசியதை தொடர்ந்து ஆளும் கட்சியினரும் அவரை எதிர்த்து முழக்கமிட்டனர்.
ராகுல் காந்தி இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பற்றியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதும் மற்றும் பிற மத்திய அமைச்சர்கள் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்து பேசினார். அதுமட்டுமின்றி பாஜக அரசிடம் பல கேள்விகளையும் முன்வைத்தார் ராகுல்.

ராகுல் பேசுகையில் இந்தியாவில் இரண்டு தொழிலாளர்கள் நாட்டைக் கட்டுப்படுத்துகிறார்கள், அம்பானி-யும் அதானி-யும் தான் நாட்டில் இருக்கும் பணத்தை மொத்தமாக மோனோபோலியாக ஆளுகின்றனர் என்று கூறினார்.
அம்பானி, அதானி குறித்து ராகுல் காந்தி பேசியபோது சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் பேசுவதை தடுத்தார், அதற்கு ராகுல் நாடாளுமன்றத்தில் அவர்களின் பெயரை சொல்ல கூட முடியவில்லை என குற்றம்சாட்டினார்.
இந்த நாட்டையே அவர்கள் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர், நாடாளுமன்றத்தில் அவர்களின் பெயர் சொல்ல கூடாது எனில் இனிமேல் நான் A1, A2 என்று அழைக்கிறேன் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராகுல் காந்தி பேசுவதை தடுத்து நிறுத்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுந்து நின்றபோது அவரை கிண்டல் செய்தார். "மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு A1 மற்றும் A2 ஐ பாதுகாக்கிறார், அவர் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர் அதை செய்வார். அவருக்கு மேலிடத்தின் உத்தரவு உள்ளது" என்று ராகுல் கூறினார்.
ராகுல் காந்தி பேச பேச தொடர்ந்து பாஜக எம்பிக்கள் கொந்தளித்து பேச தொடங்கினர். ராகுல் காந்தியை பேச விடாமல் தடுக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் யாவும் மிடில் கிளாஸ் மக்களுக்கு உபயோகமானது இல்லை என்றும் கூறி விமர்சித்தார்.
மகாபாரதத்தின் சக்கர வியூகத்தோடு பிஜேபி ஆட்சியை ஒப்பிட்டு பேசிய ராகுல், பாஜக அமைத்திருக்கும் இந்த சக்கர வியூகம் மக்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றாக இல்லை, மாறாக பயமுறுத்துவதாக உள்ளது. பாரதிய ஜனதா கட்சி அமைத்திருக்கும் தாமரை வியூகத்தில் உங்களுடைய அமைச்சர்கள், பிரதமர் போன்ற வெறும் 6 நபர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என பேசினார்.
ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம் என்றும் ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஜிஎஸ்டி மூலம் நடுத்தர தொழில் செய்பவர்கள், சிறு குறு வணிகர்கள் அழிந்து வருகின்றனர் என பேசினார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications