இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவு செய்த நிலையில், ஏப்ரல் 3 ஆம் தேதி நாமினேஷன் செய்தார். இந்த நாமினேஷன் உடன் மார்ச் 15 வரையிலான தனது சொத்து மற்றும் முதலீட்டு விபரத்தை சமர்ப்பித்தார்.
ராகுல் காந்தியின் நாமினேஷனில் பலரையும் கவனிக்க வைத்தது அவருடைய பங்குச்சந்தை முதலீடுகள் தான், மனுஷன் சும்மா சொல்ல கூடாது வலிமையான போர்ட்போலியோவை தான் உருவாக்கியிருக்கிறார். எந்தெந்த பங்குகளில் முதலீடு செய்துள்ளார் என்பத தெரியனுமா..? வாங்க சொல்றேன்.

ராகுல் காந்தி சுமார் இரண்டு டஜன் பங்குகளில் முதலீடு செய்துள்ளார், தனது போர்ட்போலியோவில் சுமார் 25 பங்குகளை வைத்துள்ளார். மார்ச் 15 நிலவரப்படி இந்த 25 பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.4.30 கோடிக்கு அதிகமாக உள்ளது என்பதை அவர் அளித்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் விபரங்கள் காட்டுகின்றது.
ராகுல் காந்தி போர்ட்போலியோ-வில் அதிக மதிப்புடைய முதலீடு ஸ்மால்கேப் நிறுவன பங்கான சுப்ரஜித் இன்ஜினியரிங் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஐடிசி மற்றும் ஐசிஐசிஐ வங்கி முதலீடுகள் அடுத்த 2 இடத்தில் உள்ளது.
சுப்ரஜித் இன்ஜினியரிங் நிறுவனத்தில் ராகுல் காந்தி 4,068 பங்குகளை வைத்திருக்கும் வேளையில், இதன் மதிப்பு 16.65 லட்சத்துக்கும் அதிகமாகும். இந்த பங்கு கடந்த 12 மாதங்களில் கிட்டத்தட்ட 20% லாபத்தை அளித்துள்ளது, இன்று சுப்ரஜித் இன்ஜினியரிங் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 0.49% குறைந்து ரூ 420.00-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
ஐடிசி-யில் 3,039 பங்குகள் மற்றும் மற்றும் ஐசிஐசிஐ வங்கியில் 2,299 பங்குகளை ரூ.12.96 லட்சம் மற்றும் ரூ.24.83 லட்சம் சந்தை மதிப்பில் வைத்துள்ளார்.
இது தவிர அல்கைல் அமீன்ஸ் (373 பங்குகள்), ஏசியன் பெயிண்ட்ஸ் (1231 பங்குகள்), பஜாஜ் ஃபைனான்ஸ் (551 பங்குகள்), தீபக் நைட்ரைட் (568 பங்குகள்), டிவிஸ் லேபரட்டரீஸ் (567 பங்குகள்), இன்ஃபோசிஸ் (870 பங்குகள்), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (234 பங்குகள்), பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (52 பங்குகள்) மற்றும் டைட்டன் கம்பெனி (897 பங்குகள்) ஆகியவை அவரது போர்ட்ஃபோலியோவில் உள்ள மற்ற முக்கிய பங்குகளாகும்.
இது தவிர, டாக்டர் லால் பாத் லேப்ஸ், பைன் ஆர்கானிக்ஸ், garware technical, GMM Pfaudler, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்போ எட்ஜ், எல்டிஐ Mindtree, Mold-Tek Packaging, நெஸ்லே, டியூப் இன்வெஸ்ட்மென்ட், Vertoz, vinyl chemical ஆகிய பங்குகளில் முதலீடு செய்துள்ளார்.
ராகுல் காந்தி போர்ட்போலியோ-வில் அம்பானி, அதானி குழும பங்குகள் எதுவுமில்லை. மேலும் 7 மியூச்சவல் பண்ட் திட்டத்தில் 3.81 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு மதிப்பைக் கொண்டு உள்ளார். இதில் பெரும்பகுதி பணம் HDFC AMC, PPFAS மற்றும் ICICI Prudential AMC ஆகிய 3 திட்டத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications