சென்னை: ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அடுத்தடுத்த அப்டேட்களை செய்து வருகிறது. தற்போது அனைத்து வகையான ரயில் சேவைகளையும் ஒரே கிளிக்கில் பெறும் வகையில் இந்திய ரயில்வே ரயின் ஒன் (Rail one) என்ற செயலியை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட், உணவு ஆர்டர் செய்வதற்கு ஐஆர்சிடிசி இ கேட்டரிங் , கருத்துக்களை பதிவு செய்வதற்கு ரயில் மடாட், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெற யூ டி எஸ் என ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு செயலிகளை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இதில் பெரும்பாலானவர்கள் ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் செயலி பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு செயலிக்கு செல்வதற்கு இவற்றை அனைத்தும் ஒரே செயலியின் கீழ் கொண்டு வரலாமே என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தான் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது, பிஎன்ஆர் நிலை கண்டறிவது, ரயில் எங்கே இருக்கிறது என பார்ப்பவது என்பன உள்ளிட்ட ரயில்வே சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளையும் ஒரே செயலிக்குள் கொண்டு வந்து இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில் ஒன் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்திருக்கிறது.
ரயில்வே சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளையும் இந்த ரயில் ஒன் செயலி மூலமாகவே நாம் பெற்றுக் கொள்ள முடியும் . ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு செயலிகளை பயன்படுத்தி வந்த பயணிகள் ரயில் ஒன் செயலியில் இந்த சேவைகள் அனைத்துமே இணைக்கப்பட்டு ஆல் இன் ஒன் செயலியாக பயன்படுத்தி கொள்ளலாம். ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு ஐஆர்சிடிசி கணக்கு பயனர் பெயர் , பாஸ்வேர்டு கொண்டு லாகின் செய்யலாம்.
ரயில் பயணங்களுக்கான முன்பதிவு டிக்கெட், முன்பதிவு அற்ற ரயில் டிக்கெட், பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்குவதற்கு ரயில் ஒன் செயலியே போதும். பிஎன்ஆர் நிலையை கண்டறிவது , ரயில்களின் நிகழ் நேர நிலையை கண்டறிவது , பிளாட்பார்மின் எந்த பகுதியில் நீங்கள் ஏறப்போகும் ரயில் பெட்டி வந்து நிற்கப் போகிறது மற்றும் இரயில் மடாட் சேவைகள் ஆகிய அனைத்தையும் இந்த ஒரே செயலி வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே அடிக்கடி ரயில்களில் பயணம் செய்பவர்கள் தற்போது தங்கள் வைத்திருக்கக்கூடிய அனைத்து செயலிகளையும் டெலிடி செய்து ரயில் ஒன் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு இது கிடைக்கும் என கூறியிருக்கிறது. இந்த செயலியில் ரயில்வே இவாலட் வசதியும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது . உணவுகளை ஆர்டர் செய்து அதனை பெறும் வசதியும் ரயில் ஒன் செயலியில் கொண்டு வரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications