ரயில் பயணிகளே.. அபராதம் கட்ட ரெடி என்றால் இதை செய்யலாம்..!

பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே துறை நிறைய விதிகளையும் வசதிகளையும் அமைத்து தருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்க வேண்டியது அவசியம்.

அதேநேரத்தில் இந்திய ரயில்வேயின் சில முக்கிய விதிகளைப் பற்றியும் ரயில் பயணிகள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் அநாவசியமாக அபராதத் தொகையை கட்ட வேண்டியிருக்கும்.

ரயில் பயணிகளே.. அபராதம் கட்ட ரெடி என்றால் இதை செய்யலாம்..!

ஒருவர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து பிடிபட்டால் அவருக்கு அதிகபட்சம் ரூ.1000 அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.250 அபராதம் விதிக்கப்படும்.

ஒரு பயணி தனது கோச்சை விட்டுவிட்டு வேறொரு கோச்சில் பயணம் செய்தால் டிக்கெட் கட்டண வித்தியாச தொகையை வசூலிக்கப்படும். அத்துடன் டிடிஇயால் அபராதமும் விதிக்கப்படலாம். ஒருவர் ஸ்லீப்பர் கோச் டிக்கெட் எடுத்து விட்டு ஏசி கோச்சில் பயணித்தால் டிக்கெட் கட்டண வித்தியாசம் வசூலிக்கப்படும்.

ரயில் பயணத்தின்போது ஒருவர் மது அருந்தியிருந்தால் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அதேபோல் அவருக்கு 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

ஒருவர் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு அடையாள அட்டையை எடுத்துச் செல்லாமல் பயணம் செய்தால் அவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதாகக் கருதப்பட்டு அவருக்கு டிடிஇ அபராதம் விதிப்பார்.

யாராவது நடுவழியில் அபாயச் சங்கிலியை தேவையின்றி இழுத்து ரயிலை நிறுத்தினால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

ரயிலில் சிகரெட் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாராவது ரயிலில் புகை பிடித்தால் அவருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் பெட்டியில் பயணம் செய்தால் அபராதமாக ரூ.500 அல்லது 3 மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

ரயில் பெட்டியில் மற்றவர்களுக்கு தொல்லை தந்தால் முதல் முறைக்கு ரூ.100ம் இரண்டாவது அல்லது அதற்கு மேல் ரூ.250 அபராதம் மற்றும் ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

ரயில் பெட்டிகளில் துண்டு பிரசுரங்களை ஒட்டினால் 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ரயிலில் இடம் பிடித்துத் தந்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

ரயில் இருப்புப் பாதையை கடந்து பிடிபட்டால் 6 மாத சிறைத்தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ரயிலில் அனுமதியின்றி வியாபாரம் செய்தால் ஓராண்டு சிறை அல்லது குறைந்த பட்சம் ரூ.1000 அல்லது அதிகபட்சம் ரூ.2000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

Story written by: Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+