பொதுவாக ஐபிஓ என்றாலே சிறு முதலீட்டாளார்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு எனலாம். ஏனெனில் பங்கு சந்தையில் நுழையும் நிறுவனங்கள் வெளியிடும் பங்குகளே பொது பங்கு வெளியீடு எனப்படுகிறது.
மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது நல்ல தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ய இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் பங்கு வெளியீட்டினை பற்றித் தான்.
ரயில்டெல் IPO எப்போது?
பங்கு வெளியீடு என்றால் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படும் நிலையில், அதிலும் பொதுத்துறை நிறுவனத்தின் ஐபிஓ நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான். ரயில்டெல் நிறுவனம் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் பிப்ரவரி 16 அன்று தனது பொதுபங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.
எவ்வளவு விலை நிர்ணயம்?
பிப்ரவரி 16 அன்று தொடங்கும் இந்த பங்கு விற்பனையானது, பிப்ரவரி 18 அன்றும் முடிவடையும். இந்த பங்கு வெளியீட்டின் விலையானது 93 - 94 ரூபாய் என்ற விலையில் இருக்கும். இந்த ஐபிஓ-வில் மினிமம் லாட் சைஸ் என்பது 155 பங்குகளாகும். இந்த பங்கு வெளியீட்டில் ஒரு தனி நபர் 13 லாட்டுகள் வரையில் வாங்கிக் கொள்ளலாம். அதாவது 2015 பங்குகளை வாங்கின் கொள்ளலாம்.
எவ்வளவு நிதி திரட்ட திட்டம்?
ரயில்டெல் நிறுவனம் இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 819.24 கோடி ரூபாய் நிதியினை திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக 8,71,53,369 பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்ய, இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
முகமதிப்பு எவ்வளவு?
மேலும் இந்த நிறுவனம் ஊழியர்களுக்காக 5 லட்சம் பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பங்கின் முகமதிப்பு 10 ரூபாயாகும். ரயில்டெல் நிறுவனம் ஒரு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வழங்குனராகும். இது இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு வழங்குனர்களில் ஒருவராகும் என்று கிரிசில் தனது அறிக்கையில் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications