இந்திய ரயில்வே துறையின் மார்டன் ரயில் கன்ட்ரோல் ஆப்ரேஷன் மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான பிராட்பேண்ட், டெலிகாம், மல்டிமீடியா நெட்வொர்க்-ஐ அளிக்கும் மிகவும் முக்கியமான நிறுவனம் தான் ரெயில்டெல் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வாயிலாகத் தான் தற்போது இந்திய ரயில்வே துறை பல டெக் மற்றும் டெலிகாம் முன்னேற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் ரெயில்டெல் இந்திய கிராமங்களுக்கும், டெலிகாம் சேவைகள் முழுமையாகக் கிடைக்காத இடங்களுக்குப் பிராட்பேண்ட் மற்றும் வைஃபை சேவைகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளது. வாவ், செம திட்டம்.
ரெயில்டெல் நிறுவனம்
ரெயில்டெல் நிறுவனம் அதிவேக இண்டர்நெட் சேவைக்குப் பயன்படுத்தும் பைபர் ஆப்டிக் கொண்டு இந்தியாவில் சுமார் 5,900 ரயில் நிலையங்களில் இண்டர்நெட் மற்றும் டெலிகாம் சேவைகளை அளித்து வருகிறது.
இதில் பெரும்பாலானவை ஊரகப் பகுதிகளில் இருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது, இதை அடிப்படையாக வைத்து இந்தியாவில் இருக்கும் கிராமங்களுக்குப் பிராட்பேண்ட் மற்றும் வைபை சேவை அளிக்கத் திட்டமிட்டு வருகிறது ரெயில்டெல்.
5,900 ரயில் நிலையங்கள்
ரெயில்டெல் ஏற்கனவே 58,742 கிலோமீட்டர் தொலைவிற்கு 5,900 ரயில் நிலையங்களில் இண்டர்நெட் வைஃபை சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் இதைப் பயன்படுத்திக் கிராமப் பகுதிகளில் பிராட்பேண்ட் மற்றும் வைஃபை சேவை அளிப்பதற்கான திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காகத் தொலைத்தொடர்புத் துறையிடம் சமர்ப்பித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டம்
இத்திட்டம் ஒப்புதல் பெரும் பட்சத்தில் நாட்டைப் போக்குவரத்து மூலம் இணைக்கும் ரயில்வே துறை, டெலிகாம் சேவை வாயிலாக மக்களையும் இணைக்க முடியும். இது மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் கிராமங்களும், ஊரகப் பகுதிகளும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் ரெயில்டெல்-ன் இந்தத் திட்டம் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிராட்பேண்ட் மற்றும் வைஃபை சேவை
இதுவரை தொலைத்தொடர்புத் துறை எவ்விதமான ஒப்புதலும், அறிக்கைக்குப் பதிலும் அளிக்கவில்லை. இத்திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த உடனேயே பிராட்பேண்ட் மற்றும் வைஃபை சேவையை வழங்குவதற்கான பணிகளை ரெயில்டெல் துவங்கிவிடும்.
அரசு நிறுவனத்திற்கு இது ஜாக்பாட்
ஏற்கனவே அனைத்து விதமான டெலிகாம் சேவை தளமும் இருக்கும் காரணத்தால் இந்நிறுவனத்தால் எளிதாக விரிவாக்கம் செய்துவிட முடியும். இதேபோல் ரெயில்டெல் நிறுவனத்திற்கு இதனால் பெரிய அளவிலான செலவும் இல்லை.
மேலும் புதிய சேவை மூலம் புதிய வருமானமும் கிடைக்கும் என்பதால் அரசு நிறுவனமான ரெயில்டெல் நிறுவனத்திற்கு இது ஜாக்பாட்.
டெலிகாம் நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்கள் டெலிகாம் துறையில் ஆதிக்கம் செலுத்தினாலும் வருமானம் குறைவாகக் கிடைக்கும் காரணத்தாலும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தாலும் இன்னும் இந்தியாவில் பல கிராமங்களுக்குச் சரியான டெலிகாம் சேவை இல்லாமல் உள்ளது.
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு பொதுத்துறை நிறுவனத்தால் மட்டுமே முடியும் என்பதை ரெயில்டெல் நிரூபணம் செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications