பயணிகளின் தேவையை கவனத்தில் கொண்டு இந்திய ரயில்வே அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை அறிவித்த வண்ணம் இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் தான் தட்கல் ரயில் டிக்கெட் முறையிலும், பொது டிக்கெட் முன் பதிவு முறையிலும் பல்வேறு மாற்றங்களை அறிவித்தது.
ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து சரி பார்த்த கணக்குகளுக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை தரக்கூடிய வகையில் இந்திய ரயில்வே மாற்றத்தை அறிவித்தது. இது ஏராளமான பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனால் எளிமையாக ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடிகிறது என பயணிகள் கூறுகின்றனர்.

இந்த சூழலில் Emergency Quota எனப்படும் அவசரகால ஒதுக்கீட்டு பிரிவில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்த முக்கியமான ஒரு அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டிருக்கிறது. அண்மையில் தான் மத்திய ரயில்வே துறை அமைச்சகம் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களையும், அம்ரித் பாரத் ரயில்களையும் அறிமுகம் செய்து வைத்தது. இந்த ரயில்களில் எமர்ஜென்சி கோட்டா முறையில் டிக்கெட் முன்பதிவு இல்லாமல் இருந்தது.
அதனை தற்போது மாற்றியுள்ளனர், அனைத்து மண்டல ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் ரயில்வே வாரியம் ஒரு கடிதம் எழுதி இருக்கிறது. அதில் இதுநாள் வரை வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் எமர்ஜென்சி கோட்டா என்ற பிரிவு இல்லாமல் இருந்தது. இனி அந்த பிரிவினை கொண்டு வரப் போகிறோம் என தெரிவித்து இருக்கிறது. இதன்படி இனி வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் எமர்ஜென்சி கோட்டா பிரிவு சேர்க்கப்படுகிறது.

பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த பிரிவு சேர்க்கப்படுகிறது எனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் மற்றும் அமரித் பாரத் ரயில்களில் ஐந்து விதமான டிக்கெட் முன்பதிவுகள் இருக்கும். எமர்ஜென்சி கோட்டா , பெண் பயணிகளுக்கான கோட்டா , மாற்றுத்திறனாளிகளுக்கான கோட்டா, மூத்த குடிமக்களுக்கான கோட்டா மற்றும் டியூட்டி பாஸ் ஆகிய பிரிவுளில் டிக்கெட் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . இதை தவிர்த்து வேறு எந்த ஒரு ரிசர்வேஷன் கோட்டாவும் இந்த இரண்டு ரயில்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக ஆர்ஏசி டிக்கெட்டுகள் இதில் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
7 மற்றும் அதற்கு மேல் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் கொண்ட அம்ரித் பாரத் ரயில்களில் 24 படுகைகள் எமர்ஜென்சி கோட்டா பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது நாடு முழுவதும் 12 அம்ரித் பாரத் ரயில்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. கூடிய விரைவில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களிலும் எமர்ஜென்சி கோட்டா அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த இரண்டு ரயில் சேவைகளும் இன்னும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை இருந்தாலும் எதிர்காலத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும், அம்ரித் பாரத் ரயில்களும் தமிழ்நாட்டில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது என்பதால் ரயில் பயணிகள் இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications