பொதுப் பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்காக இந்திய ரயில்வே டிக்கெட் எடுக்கும் முறையில் முக்கியமான மாற்றத்தை செய்துள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியோ அல்லது வேறு எந்த இடத்திலும் இருந்தபடியோ ஓபன் டிக்கெட்களை இனி வாங்கலாம்.
இதனால் ரயில்வே புக்கிங் கவுன்ட்டர்களில் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. ரயில்வே நிர்வாகத்துக்கும் அதற்கென பணியாளர்களை அமர்த்தாமல் அச்சடித்த டிக்கெட்களை வீணாக்காமலும் இருக்கும் வசதி ஏற்பட்டுள்ளது.

யூடிஎஸ் மொபைல் ஆப்பில் டிக்கெட் வாங்கும்போது நிர்ணயிக்கப்பட்டிருந்த தூர வரம்பு இப்போது நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக யூடிஎஸ் மொபைல் ஆப்பில் ஓபன் டிக்கெட் வாங்குவதற்கு அதிகபட்சம் 20 கி.மீ. நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது இது நீக்கப்பட்டுள்ளதால் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு டிக்கெட் வாங்கலாம்.
இந்த வசதியை யூடிஎஸ் மொபைல் ஆப்பில் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய ரயில்வே பயணிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
யூடிஎஸ் ஆப்பில் ஜெனரல் டிக்கெட் புக் செய்யும் முறை
1: உங்களது மொபைலில் யூடிஎஸ் மொபைல் ஆப்பை டவுண்லோடு செய்து கொள்ளவும்.
2: பின்னர் உங்களது பெயர், மொபைல் எண், ஐடி கார்டு விவரத்தை ஆப்பில் பதிவு செய்யவும்.
3: யூடிஎஸ் ஆப்பில் பதிவு செய்தவுடன் உங்களுக்கு ஒரு ஓடிபி எண் அனுப்பப்படும். அதை நிரப்பினால் நீங்கள் ஆப்பில் சைன் அப் செய்யலாம்.
4: இதன் பின்னர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும். அதை வைத்து யூடிஎஸ் ஆப்பில் லாக் இன் செய்யலாம்.
5: டிக்கெட் புக் செய்வதற்கு எந்த ஊருக்கு டிக்கெட் வேண்டுமென்பதை ஆப்பில் என்டர் செய்யவும்.
6: இதைத் தொடர்ந்து நெக்ஸ்ட் என்பதை கிளிக் செய்து
புக் டிக்கெட் பட்டனை அழுத்தவும். ஆர்-வேலட், யூபிஐ, நெட் பேங்கிங், கார்டுகள் மூலமாக டிக்கெட்களை புக் செய்யலாம்.
7. இப்போது உங்களது டிக்கெட் ஆப்பில் தெரியும். அதை நீங்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications