மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2026ஐ தாக்கல் செய்ய உள்ள நிலையில், ரயில்வே துறையில் அதிக நிதி ஒதுக்கீட்டை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகச் செயல்படும் இத்துறை, கடந்த பட்ஜெட்டிலும் பலன் பெற்றது. இந்த ஆண்டு மெகா மூலதனச் செலவு (CAPEX) ஒதுக்கீட்டை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன் தனது ஒன்பதாவது தொடர்ச்சியான பட்ஜெட் 2026 உரையை பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஆற்றவுள்ளார். மத்திய பட்ஜெட்டுக்கு ஒரு நாளே உள்ள நிலையில், ரயில்வே போன்ற முக்கியத் துறைகள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்துறை இந்தியாவின் பொருளாதார இலக்குகளை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ப்ளூம்பெர்க் நடத்திய 29 பொருளாதார வல்லுநர்கள் ஆய்வறிக்கைப்படி, சாலைகள், துறைமுகங்கள், ரயில்வேயில் அரசு அதிக செலவுகளை மேற்கொள்ளும் என சொல்கிறது. ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்ட விரிவாக்கம், இறக்குமதி வரிக் கொள்கை சீர்திருத்தம் ஆகியவை இவர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள். சாலை/ரயில்வே போன்ற உள்கட்டமைப்புத் துறைகளுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்றும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
பாதுகாப்பு, வேகம், பயணிகளின் வசதி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து நாடு தழுவிய ரயில்வே வலையமைப்பை நவீனமயமாக்குவது பட்ஜெட்டின் முக்கிய இலக்காக இருக்கும். போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்த, ரயில்வேயில் புதிய முதலீடுகளும் தொழில்நுட்ப மேம்பாடுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
மோதிலால் ஓஸ்வால் ஆய்வாளர்கள், பட்ஜெட் 2026இல் ரயில்வேத்துறை மூலதனச் செலவு அதிகரிக்கும் என குறிப்பிட்டனர். "ரயில்வேக்கான மூலதனச் செலவு ஆண்டுக்கு ஆண்டு 8-10% உயரலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு உயரும் பட்சத்தில், ரயில் மற்றும் சாலைப் பிரிவுகளில் அதிக திட்ட ஒப்பந்தங்கள் கிடைக்கும். இது எங்கள் கண்காணிப்பில் உள்ள உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்குப் பயனளிக்கும்" என்றனர்.
பஜாஜ் ப்ரோக்கிங் நிபுணர்கள், கவச் போன்ற பாதுகாப்பு அமைப்புகள், ரயில் நிலைய நவீனமயமாக்கல், திட்ட விரைவுபடுத்துதல் ஆகியவற்றில் பட்ஜெட் கவனம் செலுத்தும். துறைமுக அடிப்படையிலான, பலதரப்பு இணைப்பு வசதிகள் – குறிப்பாக ரயில் சரக்கு வழித்தடங்கள், உள்நாட்டு முனையங்கள், தளவாட மையங்கள், பசுமை உள்கட்டமைப்பு – பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்கின்றனர்.
கடந்த பட்ஜெட் 2025இல், மத்திய அரசு ரயில்வே துறைக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கியது. இது ரயில்வேயை மேம்படுத்துவதற்கான அரசின் தொடர் முயற்சி. இந்தப் பெரிய ஒதுக்கீடு, துறைக்குக் கணிசமான ஆதாயமளித்தது என்று அப்போதைய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.கடந்த ஆண்டு ஒதுக்கீடுகள், ரயில்வே வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன.
அத்துடன், அடுத்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் 100 அம்ரித் பாரத், 50 நமோ பாரத், 200 வந்தே பாரத் ரயில்கள் (படுக்கை, இருக்கை வசதிகளுடன்) தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். PPP முதலீடுகளுடன் சேர்த்து, ரயில்வேக்கான மொத்த பட்ஜெட் ரூ2.64 லட்சம் கோடி எனக் குறிப்பிட்ட வைஷ்ணவ், "இது ரயில்வேயை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய மற்றும் விரிவான முயற்சி" என்று கூறினார். எனவே அதே போன்ற அறிவிப்புகளும் ஒதுக்கீடுகளும் இந்த ஆண்டும் இடம்பெறும் என வலுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications