இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது புதிய விதிகளை அமல்படுத்தி வருகிறது. ரயில்வேயை நவீனமாக்க பல்வேறு சிறப்பு அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக புதிதாக செமி ஸ்பீடு ரயில்கள் நாட்டில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் ரயிலில் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெர்த்களை அவர்கள் விருப்பத்துக்கு மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய ரயில்வே. அதன்படி ஸ்லீப்பர் கோச்சில் இருந்து ஏசி வகுப்புக்கு தங்களது பெர்த்தை அப்கிரேடு செய்து கொள்ளலாம்.

பயணிகளின் தேவைக்கேற்ப இந்த வசதி தரப்பட்டுள்ளது. டிக்கெட்டை புக் செய்த பின்னரும் பயணிகள் தங்களது டிக்கெட்டை வேறு வகுப்புக்கு அப்கிரேடு செய்யலாம். அத்துடன் தாங்கள் செல்லும் இடத்தையும் மாற்றிக் கொள்ளலாம். இதற்குரிய கூடுதல் கட்டணத்தை செலுத்தினால் போதும்.
டிக்கெட் புக் செய்த பிறகு நீங்கள் வேறொரு வகுப்புக்கு உதாரணமாக ஸ்லீப்பர் கோச்சில் இருந்து ஏசி இரண்டாம் அல்லது ஏசி மூன்றாம் வகுப்புக்கு மாறிக் கொள்ள நினைத்தால் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் ரிசர்வேஷன் கவுன்டருக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.
அதேநேரத்தில் ரயிலில் பயணம் செய்யும்போது நீங்கள் உங்களது பெர்த்தை மாற்ற நினைத்தால் டிடிஇயை அணுகி விண்ணப்பிக்கலாம். நீங்கள் கேட்கும் வகுப்பு காலியாக இருந்தால் டிடிஇ உங்களுக்கு அந்த பெர்த்தை ஒதுக்கித் தருவார்.
அதற்குரிய வித்தியாசக் கட்டணத்தை டிடிஇயிடம் பணமாகச் செலுத்தினால் போதும். வேறொரு கோச்சில் இடம் இருந்தாலும் நீங்கள் அங்கு இதேபோல் மாற்றிக் கொள்ளலாம்.
வேறு கோச்சில் இடம் இல்லாவிட்டால் நீங்கள் பயணிக்கும் அதே கோச்சில் இடம் மாறிக் கொள்ளலாம். சைடு அப்பர் அல்லது அப்பர் பெர்த்தில் இருந்து மிடில் அல்லது லோயர் பெர்த்துக்கு டிடிஇ அனுமதி பெற்று மாற்றிக் கொள்ளலாம். இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
முன்பு இந்த வசதி இல்லை. ஸ்லீப்பர் கோச்சில் இருந்து வேறு வகுப்பு மாற நினைத்தால் டிடிஇ ஒதுக்கீடு செய்தால் மட்டுமே மாற்ற முடியும். பல நேரங்களில் இது நடக்காது. இப்போது அப்படியில்லை. நீங்கள் டிடிஇயை அணுகி காலியாக உள்ள பெர்த்துக்கு நீங்கள் நினைக்கும் வகுப்புக்கு மாறிக் கொள்ளலாம். இரண்டு வகுப்புககும் உள்ள டிக்கெட் கட்டண வித்தியாசத்தைக் கட்டினால் மட்டும் போதும். ரயிலில் டிடிஇயிடம் இந்தக் கட்டணத்தை பணமாகச் செலுத்தினால் போதும்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications