இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் சௌகரியமாக பயன்படுத்தக்கூடிய ஒரு பொது போக்குவரத்து தான் ரயில்வே. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயில் பயணம் செய்கின்றனர். ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டம், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் என தொலைதூரப் பயணங்களுக்கு ஏற்றவையாக ரயில்கள் இருக்கின்றன.
குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணத்தை ரயில்கள் வழங்குகின்றன. இதன் காரணமாக தான் இன்றும் இந்தியாவின் மிகப்பெரிய ஒரு போக்குவரத்து சேவையாக ரயில்வே தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய ரயில்வே பொறுத்தவரை பல்வேறு செயலிகள் வாயிலாக நாம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிகிறது . அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இந்திய ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பயணிகள் RailOne செயலி வாயிலாக அன்ரிசர்வடு ஜெனரல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்தால் டிக்கெட் கட்டணத்தில் மூன்று சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது . இந்த சலுகை ஆறு மாதங்களுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளது . ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரையிலான ஆறு மாத காலத்தில் பயணிகள் ரயில் ஒன் செயலியின் மூலம் அன்ரிசர்வ்டு ஜெனரல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் மூன்று சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

இது தொடர்பாக இந்திய ரயில்வே , ரயில் ஒன் செயலியில் மாற்றங்களை கொண்டு வரும்படி ரயில்வே இன்ஃபர்மேஷன் சிஸ்டம் அமைப்புக்கு கடிதம் எழுதி இருக்கிறது. R wallet மட்டுமில்லாமல் யுபிஐ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பேமென்ட்களை பயன்படுத்தக்கூடிய அனைத்து பயணிகளுக்கும் 3% தள்ளுபடி கிடைக்கும் .
ஏற்கனவே R wallet பயன்படுத்துவோருக்கு மட்டுமே 3% கேஷ் பேக் வழங்கப்பட்டது. இது தொடர்ந்து கிடைக்கும் இது மட்டும் இல்லாமல் டிஜிட்டல் பேமண்டுகளுக்கு மூன்று சதவீத தள்ளுபடியும் கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. இதன்படி பார்த்தால் ஜனவரி 14-ஆம் தேதியிலிருந்து ரயில் ஒன் செயலி வாயிலாக ஒரு பயணி R wallet பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தால் ஆறு சதவீதம் வரை டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி ரயில் ஒன் செயலி வாயிலாக மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வேறு எந்த ஒரு ஆன்லைன் தளம் அல்லது செயலி வாயிலாக முன்பதிவு செய்தாலும் இந்த தள்ளுபடி கிடைக்காது. பயணிகள் ரயில்ஒன் செயலியை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அனைத்து விதமான ரயில் சேவைகளையும் இந்த ஒரே செயலியில் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி செயலி , ரயில் நிகழ் நேர தகவல்களை அறிந்து கொள்ள ஒரு செயலி, புகார்களை பதிவு செய்ய ரயில் ஒன் என பல செயலிகளை பயன்படுத்தி வந்தோம். ஆனால் இந்த அனைத்து சேவைகளையுமே இந்த ரயில் ஒன் என்ற ஒரே செயலியில் பயன்படுத்தி கொள்ளலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications