சமீபகாலமாக உணவுப் பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அதோடு வேகமாக நகரும் நுகர்வோரின் பொருட்களின் விலையை உயர்த்த இருப்பதாகவும் முன்னணி FMCG நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக காய்கறி விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மதுரை மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ள காரணத்தினால் வெங்காய விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமை அன்று சில்லறை சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் பழைய வெங்காய ஸ்டாக்குகளையே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். முறையான குளிர் பதன கிடங்கு வசதி இல்லாததால் ஸ்டாக் வைக்க முடியாமல் சில வியாபாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் சில்லறை விற்பனை சந்தையில் கிலோ ரூ.30 முதல் 50 ரூபாய்க்கு கிடைத்த நிலையில், தற்போது மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் கிலோ 60-க்கும், சில்லறை சந்தையில் 90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்துள்ளனர்.
மதுரையின் மொத்த வெங்காய வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகியான இஸ்மாயில் கூறுகையில், "மதுரைக்கு திண்டுக்கல், தேனி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் வருகிறது. ஆனால் இந்த மாவட்டங்களில் ஆங்காங்கே பெய்த கன மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது.
மழை மற்றும் வரத்து குறைவின் காரணமாக சேமிப்பு கிடக்குகளில் வைத்திருந்த வெங்காய ஸ்டாக்கை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் மதுரைக்கு வரத்து திரும்ப ஆரம்பித்ததும் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
வெங்காய விலை உயர்வு குறித்து பேசிய மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகளின் சங்கத் தலைவர் சின்னமையன், பொதுவாக சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு தினமும் 10 டன் வெங்காயம் வரும். ஆனால் தற்போது இந்த வரத்து 30 டன்னாக குறைந்துள்ளது. மழையால் புதிய அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளதால் பழைய ஸ்டாக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் விலை உயர்ந்துள்ளது.
ஆனால் மற்ற காய்கறிகளின் விலை கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் அதே விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. மாட்டுத்தாவணி சந்தையில் முறையான சேமிப்புக் கிடங்கு வசதி இல்லாததால் காய்கறி வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.
சந்தைக்கு எதிரே அமைந்துள்ள சிப்கோவில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண் விற்பனைத் துறை வணிகர்களை கேட்டுக் கொண்டாலும், தங்களுக்கு உதவும் வகையில் சந்தைக்குள் சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications