அட கொடுமையே.. டேட்டிங் ஆப்ஸ்களால் அதிகரிக்கும் ஆபத்து.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..!!

அமெரிக்காவில் ஒரே மாதிரியான வருமானம், ஒரே மாதிரியான கல்வி மற்றும் திறன் நிலைகள் உள்ளவர்களையே மக்கள் அதிகளவில் திருமணம் செய்துகொள்வதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. டேட்டிங் ஆப்ஸ் மூலம் தனக்கு பிடித்தவாறு ஒரே மாதிரியான துணைகளை கண்டறிவதில் அதிகரித்துவரும் தேடல்களானது, வருமான சமத்துவமின்மையின் அளவீடான கினி குணகத்தில் 3-சதவீதம்-புள்ளி அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் டேட்டிங் ஆனது கடந்த 2008 முதல் அதிகரித்து வரும் குடும்ப வருமான சமத்துவமின்மைக்கு பங்களித்து வருகிறது. மக்கள் அதிகளவில் ஒரே மாதிரியான வருமானம் ஒரே மாதிரியான கல்வி நிலைகளைக் கொண்ட துணையை தேர்ந்தெடுக்கின்றனர். இதனால், அவர்களுக்கான வருமான சமத்துவமின்மையின் அளவீடான கினி குணகத்தில் 3-புள்ளி உயர்வுக்கு வழிவகுத்தது. சமீபத்தில் வெளியான செயின்ட் லூயிஸ் பெடரல் ரிசர்வ் ஆராய்ச்சியாளர்கள், வீட்டு வருமான சமத்துவமின்மை அதிகரிப்பதற்கு ஆன்லைன் டேட்டிங் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

அட கொடுமையே.. டேட்டிங் ஆப்ஸ்களால் அதிகரிக்கும் ஆபத்து.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..!!

அதன்படி, கடந்த 2008 முதல் 2021 வரையிலான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியகத்தின் அமெரிக்க சமூகக் கணக்கெடுப்பின் தரவுகள் அடிப்படையில், ஆன்லைன் டேட்டிங் பரவலான பிரபலத்தைப் பெற்றுள்ளதாகவும், அதில், பெண்கள் வயது அடிப்படையில் தனது துணைகளை அதிகளவில் விரும்புவதையும் பொருளாதார வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் 2019 ஆய்வறிக்கையில், திருமணமான தம்பதிகள் எவ்வாறு முதலில் சந்திக்கின்றனர் அப்போதைய மாற்றங்கள் என்ன என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒரே மாதிரியான துணையை தேடுவது என்பது கடந்த 1998 இல் 2 சதவீதத்திலிருந்து 2008 இல் 20 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், பின்னர் 2017 இல் கிட்டத்தட்ட 50 சதவீதமாக உயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் சந்திப்புகள் திருமணத்திற்கு அதிகமாக வழிவகுக்கும் உறவுகளைத் தொடங்கும் முக்கிய வழியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் டேட்டிங் வருமான சமத்துவமின்மையை ஏன் ஏற்படுத்துகிறது?
மக்கள் தங்களைப் போன்ற ஒருவரையே அதிகளவில் திருமணம் செய்து கொள்கின்றனர் என்பது ஆய்வறிக்கையில் தெரியவருகிறது. இது இந்த காலகட்டத்தில் குடும்ப வருமான சமத்துவமின்மையின் அதிகரிப்பிற்கு பாதி காரணமாக இருக்கலாம். மக்கள் ஒரே மாதிரியான வருமான நிலைகள் மற்றும் சமூக-பொருளாதார நிலைகளைக் கொண்ட துணைகளை தேர்ந்தெடுப்பதாகக் கூறப்படுகிறது. இது வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தலாம்.

குடும்ப வருமான சமத்துவமின்மைக்கு பங்களிக்கும் மிக முக்கியமான காரணிகளில் கல்வி (35 சதவிகிதம்) மற்றும் திறன்கள் (30 சதவிகிதம்) ஆகியவை இருக்கும். அதே நேரத்தில் வருமானம் மற்றும் வயதின் அடிப்படையில் தேர்வு ஒவ்வொன்றும் 15 சதவிகிதம் கணிசமாகக் குறைவாக பங்களிக்கின்றன. குடும்ப வருமான சமத்துவமின்மையில் துணை தேர்வின் கூட்டுச் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இது கினி குணகத்தில் 3-புள்ளி அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

கினி குணகம் என்பது 0 (சரியான சமத்துவம்) முதல் 1 (சரியான சமத்துவமின்மை) வரையிலான மதிப்புகளைக் கொண்ட ஒரு குழுவிற்குள் உள்ள வருமான சமத்துவமின்மையின் பொதுவான அளவீடு ஆகும். இந்த குணகத்தின் 3-புள்ளி அதிகரிப்பு வருமான சமத்துவமின்மையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் குறிக்கிறது. சமூகத்தில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளின் வருமானங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை வலுப்படுத்தும் வகையில், துணைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் இந்த அதிகரிப்புக்குக் காரணம்.

ஆன்லைன் டேட்டிங்கின் ஆப்ஸ் அதிகரிப்புடன் குறைந்த வெளிதேடல் செலவுகள் மற்றும் தேடல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் காரணமாக, துணைகளை கண்டறிந்து சந்திக்கும் திறனில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், இந்தியாவில் ஆன்லைன் டேட்டிங் கலாச்சாரம் உருவாகி வருகிறது. இது அதிகமான மக்கள் டேட்டிங் ஆஃப்ஸ்களை பயன்படுத்துகின்றனர். எனவே, பாரம்பரியமற்ற நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது. அதேபோல், இந்தியாவில் டேட்டிங் ஆப்ஸைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 20 மில்லியனில் இருந்து 2023ல் 82.4 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்தியா இப்போது டேட்டிங் ஆப்களுக்கான ஐந்தாவது பெரிய சந்தையாக உள்ளது. பாரம்பரியமற்ற நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது
சூழ்நிலைகள் போன்ற பாரம்பரியமற்ற பழக்கவழக்கங்களை மக்கள் அதிகம் ஏற்றுக்கொள்கின்றனர்.

மேலும் நட்பு மற்றும் காதல் ஆகியவற்றை வெளிபடுத்துகின்றனர். ஆனால், தங்கள் மகிழ்ச்சியையோ, சுய மதிப்பையோ சமரசம் செய்யத் தயாராக இல்லை. அதிகம் இந்தியப் பெற்றோர்கள் பெண்-ஆண் உறவுகளை மிகவும் சகிப்புத்தன்மையுடன் பார்க்க கற்றுக்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+