பொதுவாக பங்குச் சந்தையில் ஒருவர் முதலீடு செய்ய போகிறார் என்றால் அவருக்கு பொறுமை மிகவும் அவசியம். அடுத்ததாக, பங்குகளை ஆய்வு செய்தல், எப்போது வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட யுக்தி தெரிந்திருக்க வேண்டும். நல்ல லாபம், வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கைக்குரிய பங்குகளை அடையாளம் கண்டு, அந்த பங்குகளில் முதலீடு செய்து விட்டு பொறுமையாக இருந்தால், பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் அந்த பங்குகள் நல்ல ஆதாயத்தை கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதற்கு எடுத்துக்காட்டாக ராஜ் ரேயான் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை சொல்லலாம்.
ஜவுளித்துறையை சேர்ந்த நிறுவனம் ராஜ் ரேயான் இண்டஸ்ட்ரீஸ். 1993ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பாலிஸ்டர் சிப்ஸ் மற்றும் பாலிஸ்டர் நூல் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் முதலில் ராஜ் ரேயான் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது.

2010 ஆகஸ்ட் முதல் இந்நிறுவனம் ராஜ் ரேயான் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை பிரேசில், சிலி, கொலம்பியா,எகிப்து, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
ராஜ் ரேயான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.745.10 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.4.04 கோடி ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு வாயிலான வருவாய் ரூ.0.07ஆக உள்ளது.
கடந்த 5 ஆண்டுளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயம் கொடுத்துள்ளது. இந்த காலத்தில் இப்பங்கின் விலை ரூ.0.05லிருந்து ரூ.20ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 400 மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரு நீண்ட கால பங்குச் சந்தை முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவன பங்குகளில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.4 கோடியாக உயர்ந்திருக்கும். கடந்த ஒராண்டில் இப்பங்கின் விலை 3 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. அதேசமயம் கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 13 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
2023 மார்ச் 3ம் தேதியன்று தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ரூ.84.65ஐ எட்டியது. தற்போது இப்பங்கின் விலை ரூ.20 என்ற அளவில் உள்ளது. மேலும் இது அதன் 52 வார உச்சவிலையிலிருந்து 76 சதவீதம் குறைவாக உள்ளது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications