சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் பெண்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்த போராடிய ஐந்து ஆண்கள் குறித்து இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ராஜா ராம் மோகன் ராய்:
இந்தியாவில் ஒரு காலத்தில் மோசமான ஒரு சடங்கு நடைமுறையில் இருந்தது. சதி அதாவது கணவர் இறந்தவுடன் அவருடைய இறுதிச் சடங்கில் மனைவி தன்னுடைய உயிரையும் தியாகம் செய்து உடன்கட்டை ஏற வேண்டும் . பெண்கள் உயிர் வாழ்வதற்கான உரிமையை கூட சமூகம் மறுத்தது. பல பெண்களும் கட்டாயப்படுத்தப்பட்டு தீயில் தள்ளப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான உடன்கட்டை ஏறும் நடைமுறைக்கு எதிராக குரல் எழுப்பி இதனை ஒழித்தவர் தான் ராஜா ராம் மோகன் ராய். பிரம்ம சமாஜ் என்ற அமைப்பை உருவாக்கி சதிக்கு எதிரான போராட்டம் நடத்தி பல பெண்களின் உயிரை காப்பாற்றியவர். இது தவிர இவர் பெண்களுக்கான சொத்துரிமை மற்றும் குழந்தை திருமணங்களையும் எதிர்த்து போராடினார்.
மனோக்ஜி கர்செட்ஜி:
இந்தியாவில் ராயல் ஆசிய சங்கம் மற்றும் ராயல் புவியியல் சங்கத்தின் உறுப்பினராக இருந்தவர். பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்துப் போராடியவர். 1859 ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கான முதல் ஆங்கிலப் பள்ளியை தொடங்கினார். முதலில் மும்பையில் இருந்த தன்னுடைய வீட்டில் பெண்களுக்கான ஆங்கில பள்ளியை தொடங்கி மிகப்பெரிய புரட்சியை மேற்கொண்டார். வீட்டில் தொடங்கப்பட்ட பள்ளி பின்னாளில் பெண்களுக்கான மிகப்பெரிய கல்வி நிலையமாக மாறியது. பெண்களுக்கும் கல்வி கற்பதற்கு உரிமை உள்ளது என்பதை நிலைநிறுத்தியவர்.
3.ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே:
இந்தியாவில் பெண்களுக்கான உரிமைகளை நாட்டியதில் முக்கிய பங்கு ஆற்றியவர் தான் ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே. தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி பெற அனுமதிக்கப்படாமல் இருந்த கால கட்டம் அது. அதனை எதிர்த்து போராட்டம் செய்தவர். தன்னுடைய மனைவிக்கு கல்வி கற்பிக்க தொடங்கினார் , இதனால் தன்னுடைய சொந்த குடும்பத்தினராலேயே ஒதுக்கி வைக்கப்பட்டாலும் விடாமுயற்சியால் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த சிறுமிகளுக்கு என பள்ளியை தொடங்கி நடத்தினார். விதவை மறுமணத்தை ஆதரித்தார், பெண் சிசுக்கொலையை தடுக்க போராட்டினார்.
பெஹ்ராம்ஜி மலபாரி:
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு எழுத்தாளர், பெண் உரிமைகளுக்காகவும் குழந்தை திருமணத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராடியவர். தன்னுடைய எழுத்துக்கள் மூலம் விதவை மறுமணங்களை ஆதரித்தார். 1885 ஆம் ஆண்டு கணவர் வீட்டுக்கு திரும்ப வேண்டும் இல்லை என்றால் சிறைப்படுத்தப்படுவாய் என ஒரு பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து போராடி பெண்களுக்கு வாழும் உரிமை இருப்பதை நிலைநிறுத்தினார்.
அம்பேத்கர்:
பெண்களுக்கு என எந்த ஒரு உரிமையும் மறுக்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர். பெண்களுக்கு சொத்தில் உரிமை, விவாகரத்து கோருவதற்கான உரிமை என பல்வேறு உரிமைகளையும் சட்டப்பூர்வமாக கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
Story written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications