பாக்பட்: முயற்சி இருந்தால் எந்த ஒரு தொழிலிலும் முன்னுக்கு வரலாம் என என்பதற்கு உதாரணமாக இருக்கும் ஒரு குடும்பத்தை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
ராஜஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் துடைப்பம் தயாரித்து விற்பனை செய்து கணிசமான லாபத்தை பெற்று வருகின்றனர். கெரு என்பவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவரது குடும்பத்தில் மொத்தம் 20 பேர் இருக்கிறார்கள்.

ராஜஸ்தானில் இவர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அன்றாட உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தான் இவர்கள் குடும்பமாக துடைப்பம் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட தொடங்கி தற்போது ஓரளவு லாபம் பார்க்க தொடங்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வந்த இவர்கள் வேலை தேடி உத்திரபிரதேச மாநிலத்தின் பாக்பட் மாவட்டத்தில் குடும்பத்துடன் குடி பெயர்ந்தனர். அங்கேயும் பெரிய அளவில் இவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே இவர்கள் துடைப்பம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட தொடங்கினர். குடும்பத்தில் இருக்கும் 20 பேரும் அங்கிருந்த உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்று அருகில் இருந்த காடுகளில் உள்ள பனை மரங்களில் இருந்து கிளைகளை எடுத்து வந்து அவற்றை துடைப்பங்களாக வடிவமைத்தனர்.
ஒவ்வொரு துடைப்பம் தயாரிப்பதிலும் அவர்களுக்கு பத்து ரூபாய் லாபம் கிடைக்கிறது. இவர்களே நேரடியாக உள்ளூர் சந்தைகளிலும் கிராமங்களிலும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
எனவே தயாரிப்பு விற்பனை என அனைத்தையும் இவர்கள் குடும்பத்தில் இருக்கும் 20 பேரே பார்த்துக் கொள்வதால், இவர்களால் ஒரு துடைப்பத்தை 30 ரூபாய் வரை விற்பனை செய்ய முடிகிறது. இதன் காரணமாக தற்போது இவர்கள் ஓர் ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது என தெரிவிக்கின்றனர்.
கெரு குடும்பத்தில் இருக்கும் 20 பேருமே இதில் ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர், அவர்களே துடைப்பங்களை தயாரித்து அவர்களே அதனை சந்தைப்படுத்தி விற்பனையும் லாபம் அனைத்தும் இவர்களுக்கே வந்து சேர்கிறது.
இந்த ஒரு சிறிய தொழில் மூலம் தன்னுடைய குடும்பத்திற்கு ஒரு நிலையான வருமானம் கிடைத்திருப்பதாக கூறும் கெரு தற்போது தாங்கள் மூன்று வேலையும் உணவு உண்பதாக சந்தோஷமாக தெரிவிக்கிறார்.
ஒற்றுமையாக இணைந்து நாம் அனைவரும் ஒரு வேலையை செய்யும் போது நிச்சயம் அது வெற்றிக்கான பாதையில் நம்மை கொண்டு சென்று விடும் என்பதற்கு கெருவின் குடும்பம் ஒரு சான்று.
Story written by: Devika


Click it and Unblock the Notifications