இந்தியாவில் திருமணங்கள் என்றாலே ஒரு திருவிழாவை போல கோலாகலமாக நடத்தப்படும். பல்வேறு குடும்பங்களும் இளைஞர்களும் திருமணத்திற்காக மட்டுமே பல லட்சங்களை செலவிட வேண்டி இருக்கிறது. திருமணத்தை ஒட்டி பல்வேறு சடங்குகளும் பாரம்பரியமாக இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகின்றன.
திருமண செலவு: ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும் இந்த பழக்கவழக்கங்கள் மாறுகின்றன. ஆனால் எப்படி இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு திருமணத்திற்கு பின்பு என நடக்கக்கூடிய பல்வேறு நிகழ்வுகளுக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் அழைப்பது, விருந்து வைப்பது, உபசரிப்பது திருமணத்திற்கு மண்டபங்களை தயார் செய்வது, அலங்கரிப்பது என பல லட்சங்கள் செலவாகின்றன. திருமணத்திற்காக கடன் வாங்கி அந்த கடனை திரும்ப செலுத்தவே பாடுபடும்.

ரூ.1592க்குள் முடிந்த திருமணம்: ஆனால் இங்கே ஒரு தம்பதி வெறும் 1600 ரூபாய்க்குள் தங்களுடைய ஒட்டு மொத்த திருமண செலவுகளையும் முடித்துள்ளனர் என்பது தான் நமக்கு வியப்பை தருகிறது. இந்த காலத்திலும் இப்படியா என ஆச்சர்யம் தருகின்றனர். ராஜஸ்தானை சேர்ந்த கமல் அகர்வால் தன்னுடைய திருமணத்திற்கு தான் 1592 ரூபாய் மட்டுமே செலவு செய்ததாக தெரிவித்திருக்கிறார் . கமல் அகர்வால் தன்னுடைய காதலி ருச்சியை அண்மையில் திருமணம் செய்திருக்கிறார்.
என்ன செலவு?: தங்களுடைய திருமண செலவுகள் குறித்த விவரங்களை அவர்கள் ரெடிட் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் என்னுடைய சகோதரருக்கு திருமணம் நடத்தப்பட்ட போது நான் உடனிருந்தேன் , அந்த திருமணத்திற்கு நாங்கள் எவ்வளவு செலவு செய்தோம் எத்தனை நாட்கள் சடங்குகள் அனைத்தும் நடந்தன உள்ளிட்டவற்றை நான் கவனித்தேன் . அவ்வளவு செலவு செய்து திருமணம் நடத்துவதற்கு நான் தயாராக இல்லை எனவே நானும் என் குடும்பத்தினரும் என்னுடைய காதலி ருச்சியின் குடும்பத்தினருடன் பேசி எங்களுடைய திருமணத்தை சிம்பிளாக வைத்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம் என கூறியுள்ளார்.
பதிவு திருமணம்: அந்த வகையில் இருவரும் மே 28ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்களாம். பதிவு திருமணம் தவிர்த்து எங்கள் திருமணத்திற்காக வேறு எந்த செலவையும் செய்யவில்லை என கூறி இருக்கின்றனர். நாங்கள் பெரிய அளவில் மெஹந்தி விழா நடத்தவில்லை ,ஆடம்பரமான ஆடைகளை வாங்கவில்லை என கூறியிருக்கின்றனர். 320 ரூபாய் எங்களுடைய திருமண பத்திரப்பதிவு தாள் வாங்குவதற்காக செலவு செய்தார்களாம், 400 ரூபாய் பப்ளிக் நோட்டரிக்காக செலவு செய்துள்ளனர். 260 புகைப்படம் எடுப்பதற்கு செலவு செய்தார்களாம் டிக்ளரேசன் ஃபார்ம் பிரின்டிங் மற்றும் பிற செலவினங்களுக்காக 290 ரூபாய் செலவு , மற்ற செலவுகளுக்காக 322 ரூபாய் செலவு செய்துள்ளனர்.
பாராட்டு: அவருடைய இந்த பதிவு ரெடிட் தளத்தில் பலரின் கவனத்தையும் பெற்று இருக்கிறது. ஒரு பயனர் இதுபோன்ற திருமணங்கள் தான் தற்போதைய காலத்திற்கு தேவை என தெரிவித்திருக்கிறார். நம்முடைய வேலைக்கு உத்தரவாதம் கிடையாது எனும் போது லட்ச கணக்கில் திருமணத்திற்காக செலவு செய்த வீண் செய்ய வேண்டுமா என ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். நம்முடைய பாரம்பரிய திருமண சடங்குகளும் செலவினங்களும் நம்மை பல ஆண்டுகளுக்கு கடனாளியாக வைத்திருக்கும் அதிலிருந்து நீங்கள் தப்பி விட்டீர்கள் என ஒருவர் பாராட்டி இருக்கிறார்.
பலரது வாழ்வாதாரம் சார்ந்துள்ளது: ஒரு பயனர் உங்களுடைய சொத்து மதிப்பில் 10 லட்சம் ரூபாய் சேர்ந்து இருக்கிறது என கூறியிருக்கிறார் . அதே வேலையில் ஒரு சிலர் திருமணம் சார்ந்த சடங்குகளும் நிகழ்வுகளும் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என்பதை நாம் மறந்து விடக்கூடாது என தெரிவித்திருக்கின்றனர். சமையல் வேலை செய்பவர்கள் ,நகைக்கடை நடத்துபவர்கள் , புகைப்படம் எடுப்பவர்கள் என பலரும் இதனை சார்ந்து வாழ்வாதாரம் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளனர். நீங்கள் திருமணத்திற்கு லட்சம் லட்சமாக செலவு செய்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications