வெறும் ரூ.680 வருமானம்.. ராஜீவ் சந்திரசேகர் வேட்பு மனு செம டிரெண்டிங்..!!

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள, மத்திய ஐடி துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவித்த உடனேயே அவர் ஸ்டார் வேட்பாளராக மாறினார்.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய ஐடி துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தன்னுடைய சொத்து மதிப்பு, வருமான விபரங்களைக் கொடுத்தார். இதில் ஒரு வருடத்திற்கான வரி விதிப்பு கொண்டு வருமானத்தின் அளவு வெறும் 680 ரூபாய் என குறிப்பிட்டு உள்ளார்.

வெறும் ரூ.680 வருமானம்.. ராஜீவ் சந்திரசேகர் வேட்பு மனு செம டிரெண்டிங்..!!

இந்த தகவல் தற்போது கேரளா மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மத்திய ஐடி துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், 2021-22 ஆம் ஆண்டிற்கான தனது வரிக்குட்பட்ட வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே அறிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதையும் காட்டியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானம்: ராஜீவ் சந்திரசேகரின் வருமானம் கடந்த ஐந்து நிதியாண்டுக்கான வருமானத்தில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

2018-19 ஆம் ஆண்டில் ரூ.10.8 கோடி வருமானத்தைப் பெற்றிருந்த ராஜீவ் சந்திரசேகர், 2019-20 ஆம் ஆண்டில் ரூ.4.5 கோடியும், 2020-21 ஆம் ஆண்டில் ரூ.17.5 லட்சமும், 2021-22 ஆம் ஆண்டில் வெறும் 680 ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.5.59 லட்சம் என அவர் வருமானத்தைக் காட்டியுள்ளார். இதனைப் பார்க்கும் போது, 2018-19 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவரது வருமானம் பெரிய அளவில் சரிந்துள்ளது தெரிகிறது.

சொத்துக்கள்: வருமானம் குறைந்திருப்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ராஜீவ் சந்திரசேகர் தனது அசையும் சொத்துக்களின் மதிப்பை ரூ.9.26 கோடி எனத் தெரிவித்துள்ளார்.

இதில் ரூ.10.38 கோடி வங்கி இருப்பு, ரூ.45.7 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்கள் (negative assets), ரூ.2,500 மதிப்பிலான தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), ரூ.41.2 கோடி மதிப்பிலான தனிநபர் கடன்கள், ரூ.10,000 மதிப்பிலான ஸ்கூட்டர், ரூ.3.35 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான பிற சொத்துக்கள் ஆகியவை அடங்கும்.

மேலும், ராஜீவ் சந்திரசேகரின் மனைவியின் பெயரில் ரூ.12.47 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தனது வேட்பு மனுவில் அறிவித்துள்ளார்.

அசையா சொத்துக்கள்: ராஜீவ் சந்திரசேகரின் அசையா சொத்துக்களைப் பொறுத்தவரை, இவருக்கு ரூ.14.4 கோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அதே நேரத்தில் ரூ.19.42 கோடி மதிப்பிலான கடன்களையும் அவர் கொண்டுள்ளார்.

யாருடன் போட்டி: திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூரையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) பன்னியன் ரவீந்திரனையும் எதிர்த்து ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+