பெரும்பாலான தொழிலதிபர்கள் தங்களது நிறுவனத்தை தொடங்குவதற்கு முன் ஏதாவது ஒரு நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் ஒரு வேலையை பார்த்து இருப்பர். பின்பு அந்த வேலையை வேண்டாம் என்று துணிந்து முடிவெடுத்து அவர்கள் தங்களது நிறுவனத்தை தொடங்கி இருப்பர்.
தன் மீதான நம்பிக்கை, துணிந்து முடிவெடுத்தல் மற்றும் கடின உழைப்பு ஆகிய மூன்றும் சாதாரண மனிதனாக இருந்த அவர்களை வெற்றிகரமான தொழிலதிபர்களாக மாற்றி விடுகிறது. அப்படிப்பட்ட வெற்றிகரமான தொழிலதிபர்களில் ஒருவர்தான் இந்தியாவின் ஒயின் கிங் என்றழைக்கப்படும் ராஜீவ் சமந்த்.

நாட்டின் முன்னணி ஒயின் தயாரிப்பு நிறுவனமான சுலா வைன்யார்ட்ஸின் புரோமோட்டர், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் சமந்த். மும்பையில் பிறந்தவரான ராஜீவ் சமந்த அங்கே தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார்.
இதன் பின்பு அமெரிக்காவில் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் முடித்தார். இதனையடுத்து பொறியியல் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றார்.
ராஜீவ் சமந்த் படிப்பு முடிந்தவுடன் சிலிக்கான் வேலியில் உள்ள ஆரக்கிள் கார்ப்பரேஷனில் சிறிது காலம் வேலை பார்த்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு அமெரிக்கா சலிப்பை ஏற்படுத்தியதோ என்னவோ , 1993ல் அதிக சம்பளத்தில் ஆரக்கிள் கார்ப்பரேஷினில் வேலைபார்த்து வந்த வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ராஜீவ் சமந்த் இந்தியாவுக்கு திரும்பினார்.
சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து ராஜீவ் சமந்த் 1999ல் ஒயின் தயாரிப்பு நிறுவனமான சுலா வைன்யார்ட்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். தன்னுடைய இந்த முயற்சி நாசிக்கை இந்தியாவின் ஒயின் தலைநகராக மாற்ற போகிறது என்பது அப்போது ராஜீவ் சமந்துக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.
இன்று சுலா வைன்யார்ட்ஸ் இந்தியாவின் மிக முக்கியமான ஒயின் உற்பத்தியாளராக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ.3) நிலவரப்படி, சுலா வைன்யார்ட்ஸ் நிறுவன பங்கின் விலை ரூ.475.25ஆக இருந்தது. சுலா வைன்யார்ட் நிறுவனத்தின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.4,011 கோடியாகும்.
அம்மா சுலபா மீது ராஜீவ் சமந்த் அதிக அன்பு கொண்டவர். அதனால் தான் தனது நிறுவனத்துக்கு தனது அம்மாவின் பெயரை வைத்தார். ராஜீவ் சமந்த் ஒரு தொழிலதிபர் என்பதை தவிர்த்து, ஒரு உறுதியான சுற்றுச்சூழல் ஆர்வலர். ராஜீவ் சமந்த் இந்தியாவில் எண்ணற்ற புதிய சாதனை படைத்தார்.
2005ல் முதல் முறையாக ஒயின் டேஸ்டிங் ரூம் அறிமுகம், 2007ல் நாட்டின் முதல் வைன்யார்ட் ரிசார்ட் மற்றும் நாட்டின் முதல் வைன்யார்ட்ஸ் இசை விழாவான சுலாஃபெஸ்ட் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஒயின் சுற்றுலாவில் புரட்சியை ஏற்படுத்தினார்.


Click it and Unblock the Notifications