தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை டிசம்பர் 12ஆம் தேதி தனது 74 வயதை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளைக் கண்டவர். அவர் தனது அதிரடியான ஸ்டைல் மற்றும் திறமையால் ரசிகர்களை வெறித்தனமாக்கியவர். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கிறது. இவர் ஆடம்பர வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார். கார் சேகரிப்பு முதல் சொகுசு வீடு வரை ரஜினிகாந்தின் வாழ்க்கை மற்றும் சொத்துக்கள் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் ரஜினி சுமார் ரூ.125 கோடி சம்பளமாக பெற்றார். இது அந்த படத்தில் நடித்த அமிதாப் பச்சனை விட 17 மடங்கு ஆகும். இவர் இந்தியா நடிகர்களில் அதிக பணத்தை சம்பாதிப்பவர்களில் ஒருவராக திகழ்கிறார். ஒரு படத்தில் நடிப்பதற்காக இவர் ரூ.125 கோடி முதல் ரூ.270 கோடி சம்பளம் வாங்குகிறார். அத்துடன் இவர் சம்பாதிக்கும் தொகைகளில் பகுதி அளவை அறக்கட்டளைக்களுக்கு நன்கொடை வழங்குகிறார்.

ரஜினிகாந்தின் அறக்கட்டளை ஆனது இந்தியாவில் சென்னையில் உள்ள ஒரு அரசு சாரா அமைப்பு (NGO), அதன் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறக்கட்டளையானது 2015 ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு சேவை செய்து வரும் மருத்துவ வசதியைக் கொண்டுள்ளது. பள்ளிக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவற்றையும் இந்த அறக்கட்டளை விநியோகிக்கிறது. தனது அறக்கட்டளையின் மூலம் பிரம்மாண்டமான மருத்துவமனையை கட்டுகிறார்.
அதேபோல், ரஜினி சென்னை புறநகரில் 12 ஏக்கர் நிலம் வாங்கி, ஏழைகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், 150 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனை கட்டப்படும் என கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் சொத்து மதிப்பை பொறுத்தவரை தற்போது வரை ரூ.430 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அவரது விலையுயர்ந்த பொருட்களில் முதலில் அவரது ஆடம்பரமான பங்களா. சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்துக்கு சொகுசு பங்களா உள்ளது. இந்த சொத்தின் விலை சுமார் 35 கோடி ரூபாய் ஆகும். இது தவிர ரஜினிகாந்துக்கு திருமண மண்டபம் உள்ளது. அவரது திருமண மண்டபத்தின் விலை 20 கோடி மற்றும் அதன் பெயர் ராகவேந்திரா மண்டபம்.
அதேபோல், ரஜினிகாந்திடம் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் மாடல்கள் உள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்டின் விலை ரூ.6 கோடி என்றும், மற்ற ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் காரின் விலை ரூ.16.5 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர ரூ.1.77 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்5, ரூ.2.55 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் மற்றும் லம்போர்கினி உருஸ் ஆகிய கார்களை வைத்துள்ளார். ரூ.6 கோடி மதிப்புள்ள பென்ட்லி லுமினஸ் காரும் வைத்துள்ளார்.
ரஜினிகாந்த் ஜெயிலர், காலா, பேட்ட, சிவாஜி தி பாஸ், 2.0, தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்தார். இப்போது அவர் 2025 இல் வெளியாக உள்ள கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications