சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 75 வயதிலும் பாக்ஸ் ஆபிஸில் தனது வசூல் மன்னன் பட்டத்தை தக்கவைத்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த். கோவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒட்டுமொத்தமாக 1,000 கோடி ரூபாய் நிகர வசூலை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு பிறகு ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான 5 படங்களும் பிரம்மாண்ட வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் வெளியானது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 106.77 கோடி ரூபாய் வசூல் செய்தது. 2023ஆம் ஆண்டில் ஜெயிலர் படம் வெளிவந்தது. அந்த படம் 348.55 கோடி ரூபாய் வசூலித்து, மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியை தந்தது.

2024ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வெளியானது. இந்த படம் 146.89 கோடி ரூபாய் நிகர வசூல் செய்தது. 2025ஆம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக போகவில்லை என்றாலும் 285.01 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்த சூழலில் கடந்த வாரம் ஜெயிலர் 2 படம் வெளியானது. இந்த படம் முதல் 3 நாட்களிலேயே 144.6 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இந்த ஐந்து படங்களின் ஒட்டுமொத்த வசூல் மூலம், கோவிட்-க்கு பிந்தைய கால கட்டத்தில் ரஜினிகாந்த் படங்களின் மொத்த வசூல் 1031.82 கோடி ரூபாயை தொட்டுள்ளது.
கோவிட்-க்குப் பிறகு கோலிவுட் திரையுலகில் 1,000 கோடி ரூபாய் நிகர வசூல் கிளப்பில் இணைந்த நடிகர்களில் ரஜினிகாந்தும் இடம்பிடித்துள்ளார். தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2 படம் இன்னும் வசூலை வாரி குவிக்கும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒட்டு மொத்த வசூல் இன்னமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கோலோச்சி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்றும் தான் ஒரு அசைக்க முடியாத பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபனம் செய்துள்ளார். ரஜினி படம் என்றாலே தியேட்டரில் கண்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் துளியும் குறையவில்லை. அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் தர்மன் திரைப்படம் தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications

