ஜெயிலர் எஃபக்ட்: ரஜினிகாந்த்-ன்னா சும்மாவா.. நினைச்சுகூட பார்க்கல, இப்படியெல்லாம் நடக்கும்னு..!

சன்பிக்சர்ஸ் தலைவர் கலாநிதி மாறன் கூறியது போல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ 5 தலைமுறையினர் ரசித்து வரும் வேளையில் இன்று உலகம் முழுவதும் ஜெயிலர் படம் ரீலிஸாகியுள்ளது. பொதுவாக பெரிய படங்கள் வந்தால் முதல் நாளே படத்தை பார்த்துவிட வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் ஆசையாக இருக்கும்.

இப்படியிருக்கும் போது ரஜினிகாந்த் திரைப்படம் வருகிறது என்றால் கேட்கவா வேண்டும் காலை 6 மணி ஷோவுக்கே மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகும் ஜெயிலர் படம் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில் சென்னை, பெங்களூரில் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

ஜெயிலர் எஃபக்ட்: ரஜினிகாந்த்-ன்னா சும்மாவா.. நினைச்சுகூட பார்க்கல, இப்படியெல்லாம் நடக்கும்னு..!

இதுவே ரஜினி வெறியராக இருக்கும் சிஇஓ-க்கள் ஊழியர்களுக்கு லீவும் கொடுத்து இலவசமாக டிக்கெட்டும் வாங்கி கொடுத்துள்ளனர். இதேவேளையில் லீவ் கிடைக்காத, டிக்கெட் கிடைக்காத மக்கள் இன்று ஆபீஸ்-க்கு சென்றாலும் காலை முதல் டிவிட்டர், பேஸ்புக் என ஜெயிலர் படம் குறித்த அப்டேட்களை தேடி தேடி பார்த்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் யுனோ அக்வா கேர் என்னும் நிறுவனம் ஆகஸ்ட் 10ஆம் தேதியை தனது நிறுவனத்திற்கும் அலுவலகத்திற்கும் அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அலுவலகம் சென்னை, பெங்களூரு, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், அழகப்பன் நகர் போன்ற இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி ஊழியர்கள் விடுமுறைக்காக பொய்யாக விடுமுறை கேட்டு மேனேஜர்களையும், HR ஊழியர்களையும் தொல்லை செய்வதை தவிர்க்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியானதையொட்டி, ஆகஸ்ட் 10, 2023 அன்று விடுமுறை அறிவிக்க முடிவு செய்துள்ளோம் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளது.

மேலும் ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்குவதன் மூலம் anti piracy ஆதரிக்க கூடுதல் முயற்சியை எடுத்துள்ளோம் என்றும், இது அனைத்தும் ரஜினிகாந்த் என்ற ஒரேயொரு சூப்பர்ஸ்டார்-க்காக மட்டுமே எனவும் அந்த நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் தமிழ்நாட்டில் மற்றொரு நிறுவனமான சேலம் சர்வே குரூப் என்னும் நிறுவனம் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், கோவா, மும்பை மற்றும் ஒடிசாவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ரிலீஸாகும் நாளில் விடுமுறை என அறிவித்துள்ளது.

மேலும் கோயம்புத்தூரில் பிரபலமான Le Hive என்னும் ஒரு உணவகம், அதன் ஊழியர்களுக்கு ஜெயிலர் படத்தின் "முதல் நாள், முதல் காட்சியை (FDFS) எந்த பிரச்சனையும் இல்லாமல் ஊழியர்கள் பார்க்க Le Hive நிர்வாகம் அரை நாள் விடுமுறையை அறிவிக்க முடிவு செய்தது என Le Hive இன் மூத்த நிர்வாக அதிகாரி ஜெயகிருஷ்ணா டி ஜே தெரிவித்தார்.

ஜெயிலர் எஃபக்ட்: ரஜினிகாந்த்-ன்னா சும்மாவா.. நினைச்சுகூட பார்க்கல, இப்படியெல்லாம் நடக்கும்னு..!

பொதுவாக ரஜினிகாந்த் திரைப்படம் விடுமுறை நாளில் வெளியாகும், பின்பு வர்த்தக காரணத்திற்காக விடுமுறைக்கு ஒரு நாள் முன்பாக வெளியிடப்பட்டது. இதன் நீண்ட முறை வரும் நேரத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது, இதனால் அதிகப்படியான ஊழியர்கள், மாணவர்கள் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை உருவானது.

சில வருடங்களுக்கு முன்பு வெகு சில இடத்தில் மட்டுமே அரை நாள் பர்மிஷன் கொடுக்கப்பட்டது, அதன் பின்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை துவங்கிய தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் மாடலை கொண்டு வந்தனர், இதன் பின்பு பெரிய கார்ப்ரேட் நிர்வாகமும் இதை தொடர்ந்தது.

தற்போது சிறிய அல்லது நடுத்தர நிறுவனங்கள் கூட விடுமுறை அளிப்பது பேஷனாக மட்டும் கெத்தாகவும் பார்க்கும் வழக்கம் உருவாகியுள்ளது. இதுபோன்ற அறிவிப்புகள் வேறு எந்த நடிகர்களுக்கும் நினைத்துகூட பார்க்க முடியாது. இதனால் தான் ரஜினிகாந்த். சரி படம் எப்படி இருக்கு கமெண்ட் பண்ணுங்க..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+