சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் ரிலீஸாகும் நாள் தீபாவளி தான் என்று கூறுவது இன்றளவும் 110% உண்மையாகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்பத்தூரில் பல நிறுவனம் இன்று காலையில் ரிலீஸ் ஆன ஜெயிலர் படத்தை ஊழியர்களை ஜாலிக்காக பார்க்க வேண்டும் என்பதற்காக முழு விடுமுறையை அறிவித்துள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக அமெரிக்க பங்குச்சந்தை Nasdaq பட்டியலிடப்பட்டு சென்னை மற்றும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மென்பொருள் (SaaS) நிறுவனமான ஃப்ரெஷ்வொர்க்ஸ் தரமான சம்பவத்தை செய்துள்ளது.

கிரிஷ் தலைமையிலான ஃப்ரெஷ்வொர்க்ஸ் அதன் ஊழியர்கள் அனைவருக்கும் வியாழன் அன்று மிகப்பெரிய சினிமா திரையரங்கில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "ஜெயிலர்" திரைப்படத்தை முதல் நாளே பார்க்க ஏற்பாடு செய்துள்ளது.
கிரிஷ் மாத்ருபூதம் மிகப்பெரிய ரஜினி ரசிகர் என்பதால் ஒவ்வொரு திரைபடத்தின் ரிலீஸின் போதும் அதிரடியாக அறிவிப்புகளை அறிவிப்பது வழக்கம். இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்திற்காக சுமார் 2,200 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளது என்று அதன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிரிஷ் மாத்ருபூதம் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கிரிஷ் மாத்ருபூதம் ஃப்ரெஷ்வொர்க்ஸ் (FRESHWORKS) ஊழியர்களுக்காக சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்துள்ள நிலையில் 2,200 டிக்கெட்டுகள் 7 திரைகள் ஃப்ரெஷ்வொர்க்ஸ் ஊழியர்களுக்கு மட்டுமே இருக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கிரிஷ் மாத்ருபூதம் ட்வீட் செய்ததுள்ளார்.
இதற்கு முன்பு கபாலி படத்திற்காக சென்னையில் சத்யம் சினிமாஸ் திரையரங்கை மொத்தமாக புக் செய்தார் கிரிஷ் மாத்ருபூதம். இதேபோல் கோச்சடையான், லிங்கா ஆகிய திரைப்படங்களுக்கும் இதேபோன்று ஊழியர்களுக்கு டிக்கெட் புக் செய்திருந்தார்.
கிரிஷ் மாத்ருபூதம் zoho நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தை காலையில் முதல் ஷோ பார்த்துவிட்டு, நேரடியாக அலுவலகம் வந்து தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதன் பின்பு தான் ஃப்ரெஷ்டெக்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார், பின்னாளில் இது ஃப்ரெஷ்வொர்க்ஸ் (FRESHWORKS) ஆக பெயர் மாற்றப்பட்டது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications