நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா இது? 1971இல் அவருக்கு இவ்வளவு தான் சம்பளமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டைலான நடிப்பால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். 75 வயதிலும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சாதாரண பேருந்து நடத்துநராக இருந்து இந்தியாவின் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாகவும் ஒரே சூப்பர் ஸ்டாராகவும் தொடர்ந்து தன்னை தக்க வைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் செய்திதான், அவர் ஒரு படத்தில் நடித்தாலும் அது ஒரு செய்தி தான். அவர் ஒரு பேட்டி கொடுத்தால் அது ஒரு பிரேக்கிங், பேட்டி கொடுக்காமல் சென்றாலும் அது ஒரு முக்கிய செய்தி என தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத ஒரு நபராக மட்டுமில்லாமல் திரை துறையிலும் அனைத்து மொழி நடிகர்களும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு ஆளுமையாக ரஜினிகாந்த் தொடர்ந்து திகழ்கிறார்.

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா இது? 1971இல் அவருக்கு இவ்வளவு தான் சம்பளமா?

ரஜினிகாந்த் கர்நாடகாவில் சாதாரண ஒரு பேருந்து நடத்துனராக இருந்து தான் பின்னர் திரைத்துறைக்கு வந்து வில்லனாக நடிக்க தொடங்கி ஹீரோவாகி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவர் பேருந்து நடத்துனராக இருந்தபோது அவர் பயன்படுத்திய ஐடி கார்டு தொடர்பான ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.சிவாஜிராவ் கெய்க்வாட் என்பதுதான் ரஜினிகாந்தின் இயற்பெயர். திரைத்துறைக்கு வந்து தான் தன்னுடைய பெயரை ரஜினிகாந்த் என மாற்றி கொண்டார்.

Also Read

தன்னுடைய இளமைப்பருவத்தில் வறுமையின் பிடியில் வளர்ந்த ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக இருந்தபோது பெங்களூரு ட்ரான்ஸ்போர்ட் சர்வீசில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். அப்போதே அவர் விசில் அடிப்பது , டிக்கெட் கிழித்து கொடுப்பது ஆகியவை ஸ்டைலாக இருக்கும் என அவருடன் பணிபுரிந்த பலரும் தெரிவித்துள்ளனர். அதுதான் பின்னாளில் படங்களிலும் அவரது ஸ்டைலுக்கு கை கொடுத்தது.

Recommended For You

ரஜினிகாந்த் சிவாஜி ராவாக இருந்து கண்டெக்ட்ராக வேலை செய்த போது வழங்கப்பட்ட ஒரு அடையாள அட்டை தற்போது வைரலாகி வருகிறது. பெங்களூருவின் எந்த பகுதியில் அவர் வேலை செயல்தார் என்ற விவரங்களும் அவர் எந்த தேதியில் பணியில் இணைந்தார் அவருடைய பிறந்த தேதி என்ன அவருடைய ரத்த வகை என்ன , மாதாந்திர சம்பளம் என்ன என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கான விஷயமாக இருக்கிறது . 1971 ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி ரஜினிகாந்த் பெங்களூர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் பேருந்து நடத்துனராக பணிக்கு சேர்ந்திருக்கிறார். அப்போது அவர் ஸ்ரீநகர் டிப்போவில் ரூட் நம்பர் 10ஏ-வில் நடத்துனராக வேலை செய்து வந்திருக்கிறார். ரஜினிகாந்தின் ரத்த வகை பி-பாசிட்டிவ். அப்போது அவருடைய மாதாந்திர சம்பளம் 275 ரூபாய் என அந்த அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ரசிகர்கள் இதனை வெறும் ஒரு அடையாள அட்டையாக பழைய நினைவுகளை தூண்டக்கூடிய ஒரு ஆவணமாக மட்டும் பார்க்காமல் ரஜினிகாந்த் எனும ஆளுமையின் தொடக்க கால பயணத்தையும் நம்பிக்கையை விதைக்கும் ஒரு விஷயமாகவும் தான் பார்க்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு மாதம் 275 ரூபாய் சம்பளம் வாங்கிய ரஜினிகாந்த் இன்று ஒரு படத்திற்கே 150 முதல் 200 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். கிட்டதட்ட 500 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவராக திகழ்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+