தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை கேட்டு ரஜினிகாந்த் ஷாக்..!!

வர வர இந்திய சினிமா நட்சத்திரங்களின் சம்பளத்தைக் கேட்டாலே தலை சுற்றி விடுகிறது. தென்னிந்திய திரையுலகில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப்-சேப்டர் 2, விக்ரம், காந்தாரா போன்ற படங்கள் மிகப் பெரிய ஹிட்டாகி கோடிக்கணக்கான வசூலை அள்ளின.

இதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன், ராம் சரண், விஜய், தனுஷ், ஜூனியர் என்டிஆர் போன்ற நடிகர்கள் தங்களது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டனர். இதை கேட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் உட்பட அனைத்து நடிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை கேட்டு ரஜினிகாந்த் ஷாக்..!!

அதேபோல் சிலர் பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங், அக்ஷய்குமார், ஹிரித்திக் ரோஷன், ரன்பீர் கபூர், அஜய் தேவ்கன் போன்றவர்களுக்கு இணையான அல்லது அதற்கும் மேலான சம்பளத்தை வாங்குகின்றனர். புஷ்பா ஹிட்டுக்குப் பின்னர் அல்லு அர்ஜுன் தனது சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி விட்டார். இந்த நிலையில் புஷ்பா 2 பட வேலைகள் தற்போது நடந்துக்கொண்டு வருகிறது.

ஆர்ஆர்ஆர் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ராம் சரண் தனக்கு ரூ.45 கோடியை சம்பளமாகத் தரவேண்டும் எனக் கேட்கிறார். கௌதம் தின்னானுரி இயக்கத்தில் வெளியாகும் தனது அடுத்த படத்துக்கு ரூ.100 கோடி தரவேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இதனிடையே இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி படத்தின் மூலமாக பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்ட நடிகர் பிரபாஸ் தனது இரு படங்களுக்கு மொத்தமாக ரூ.250 கோடி சம்பளம் வேண்டும் என்று டிமாண்ட் செய்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பு செலவு ரூ.1000 கோடி என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

44 வயதான பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் தொடங்கினார். அவரது கடைசிப்படமான ஆதிபுருஷ் செம அடி வாங்கியது, இதிலிருந்து மீண்டு வருவதற்காக துடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பிரபாஸ் நடித்து வெளியான சலார் படம் கலெக்ஷனை அள்ளிக்கொண்டு இருக்கிறது.

இதை தொடர்ந்து தனது படங்களான சலார்-பார்ட் 2, கல்கி 2898 ஏடி ஆகியவை சூப்பர் டூப்பராக இருக்கும் என்று நம்புகிறார். இதனால் தற்போது வெளியாகியுள்ள சலார் படத்துக்கு ரூ.100 கோடியும், அடுத்து வெளியாக உள்ள கல்கி படத்துக்கு ரூ.150 கோடியும் சம்பளமாகக் கேட்டுள்ளார்.

கல்கி 2898 ஏடி திரைப்படம் பிரபாஸ் உடன் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பட்டானி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் படம். இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.600 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது.

2024 ஜனவரி 12 ஆம் தேதியன்று கல்கி 2898 ஏடி படம் வெளியாகிறது. அத்துடன் பிரபாஸ் நடித்துள்ள சலார் படம் ஒரு ஆக்ஷன் திரில்லராக இருக்கும் எனத் தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+