சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒவ்வொரு திரைப்படம் வெளியாக கூடிய நாளுமே அவர்களின் ரசிகர்களுக்கு பெரிய திருவிழா தான். நடிகர் ரஜினிகாந்த் திரையுலகத்தில் 50 ஆண்டு காலத்தை நிறைவு செய்திருக்கிறார் , அவருடைய 75ஆவது பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த இரண்டையும் பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர் .
ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு நாளைய தினம் ரஜினிகாந்தின் மாபெரும் ப்ளாக் பஸ்டர் படமான படையப்பா திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடிய தீர்த்த படங்களில் ஒன்று படையப்பா. இன்றும் கூட டிவியில் படையப்பா படம் போட்டால் போனையே கையில் எடுக்காமல் குடும்பமாக அமர்ந்து அனைவரும் ரசிக்கும் ஒரு படம்.

படையப்பா படம் 1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் , சௌந்தர்யா , சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தின் தயாரிப்பாளர் ரஜினிகாந்த் தான். அந்த காலகட்டத்தில் இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு படம் இது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படையப்பா படம் வெள்ளி திரையில் வர இருக்கிறது என்பதால் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் .
ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று இந்த படம் ரிலீஸ் செய்யப்படுவதால் திரையரங்குகளில் கூட்டம் அலை மோத போகிறது . 1999ஆம் ஆண்டு படம் வெளியான போது பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் வேட்டை செய்தது. இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு அடுத்ததாக நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் வில்லத்தனமான நடிப்பு இன்றளவும் பேசப்படுகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு படையப்பா திரைப்படம் நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளோடு மேம்படுத்தப்பட்டு ரீரிலீஸ் செய்யப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை கில்லி திரைப்படம் தான் ரீ ரிலீஸில் வசூலில் சாதனை படைத்தது. அந்த சாதனையை படையப்பா நிச்சயம் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது. அந்த காலத்திலேயே படையப்பா திரைப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்தது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து தான் படையப்பா கதையை உருவாக்கி திரைக்கதை எழுதும்படி ரவிக்குமாரிடம் ரஜினிகாந்த் கூறினாராம்.

படத்தின் ஒவ்வொரு பஞ்ச் டயலாக்கும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவை. படையப்பா திரைப்படத்தை நாம் டிவியில் போடும் போது மட்டுமே ரசிக்க முடியும். ஏனெனில் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் படையப்பா படம் வெளியிடப்படவில்லை. நடிகர் ரஜினிகாந்த் தான் படையப்பா படத்தின் உரிமத்தை எந்த ஓடிடி தளத்திற்கும் வழங்காமல் வைத்திருக்கிறார். இதற்கான காரணத்தையும் அவர் போட்டு உடைத்துள்ளார்.
படையப்பா ரசிகர்களுக்கு மிகச்சிறந்த ஒரு திரை அனுபவத்தை கொடுக்கக் கூடிய ஒரு படம் . இந்த படமே ஒரு கொண்டாட்ட மனநிலையை கொடுக்க கூடியது. இந்தத் திரைப்படத்தை நாம் குடும்பத்தோடு வீட்டு திரையிலும் சினிமா தியேட்டரிலும் பார்த்தால் மட்டுமே அந்த கொண்டாட்ட மனநிலை கிடைக்கும் என்பதாலே ரஜினிகாந்த் படையப்பா ஒளிபரப்பு உரிமத்தை எந்த ஓடிடி தளத்திற்கும் வழங்கவில்லை என கூறியுள்ளார்.
படையப்பா படத்தின் ஒளிபரப்பு உரிமம் கேட்டு பல முன்னணி தளங்களும் தங்களை அணுகியதாகவும் ஆனால் அது திரையரங்கு மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானால் தான் ரசிகர்களுக்கு உண்மையான கொண்டாட்டமே என கருதி தான் அதனை வழங்க வில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
படையப்பா படம் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டிருக்கும். ஸ்டைல், பஞ்ச் டயலாக், சண்டை காட்சிகள், காதல், சோகம், இழப்பு, வெற்றி என அனைத்து உணர்வுகளையும் ரசிகர்களுக்கு அப்படியே கடத்தி விடும். எனவே தான் படையப்பா ரீ ரிலீஸையே ரசிகர்கள் புது படம் ரிலீசாவதை போல கொண்டாடுகின்றனர்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications