நாளை மறுதினம் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாக இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தில் முக்கால்வாசி பணத்தை டிக்கெட் விற்பனையிலேயே எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கூலி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை மறுதினம் வெளியாக இருக்கிறது. திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளும் பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது. இந்த திரைப்படத்தில் நாகார்ஜுனா ,உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது. முதல் நாளிலேயே இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்ட கூடும் என திரைத்துறை சார்ந்தவர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.
கூலி படத்துக்கான டிக்கெட் முன்பதிவில் பல சாதனைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிலேயே இந்த திரைப்படத்திற்கான அட்வான்ஸ்டு டிக்கெட் புக்கிங் மூலம் மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்திருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஃப்ரீ ரிலீஸ் டிக்கெட் வருமானமே சுமார் 13 கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறதாம்.

இந்தியாவை விட வெளிநாட்டில் தான் கூலி படத்திற்கான வசூல் களைகட்டி இருக்கிறது. முதலில் வெளிநாட்டில் இந்த படத்தை திரையிடும் உரிமமே 68 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினை பொருத்தவரை போது வட அமெரிக்காவில் மட்டும் இத்திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் மதிப்பு 2 மில்லியன் டாலர்களை கடந்திருக்கிறதாம். இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இவ்வளவு வசூல் கிடைத்ததில்லை என சொல்லப்படுகிறது. 2 மில்லியன் டாலர்கள் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய் ஆகும்.
இது தவிர ஜெர்மனி, சிங்கப்பூர் ,மலேசியா , ஜப்பான் ஆகிய நாடுகளிலும் கூலி திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் திரையிடப்பட இருக்கிறது. இங்கே டிக்கெட் முன்பதிவில் மட்டும் 40 கோடிக்கும் அதிகமாக இருப்பது தரவுகள் மூலம் தெரிய வருகிறது. வட அமெரிக்கா முழுவதும் முதல் நாளன்றே கூலி படத்தின் டிக்கெட் வசூல் 3 மில்லியன் டாலர்களை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
தற்போதே இந்த படம் கிட்டத்தட்ட 65 கோடி ரூபாயை டிக்கெட் விற்பனையிலேயே வசூல் செய்துவிட்டது. இதில் வெளிநாட்டு சந்தையில் இருந்தே சுமார் 40 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் ஒரு டிக்கெட் 2,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
நாகர்ஜுனா வில்லனாக நடித்திருப்பதால் ஆந்திராவிலும், அமீர்கானுக்கு ஒரு கதாபாத்திரம் இருப்பதால் வட இந்தியாவிலும் திரைப்படம் வெற்றியடையும் என எதிர்பார்க்கின்றனர் . இதுவரை இல்லாத அளவாக புக் மை ஷோ தளத்தில் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை என்பது 1.5 மில்லியனை கடந்துள்ளதாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications