சுந்தர் பிச்சை, சத்ய நாடெல்லாஷ சாந்தனு நாராயன், லக்ஷமன் நரசிம்மன், லீனா நாயர் வரிசையில் அமெரிக்காவில் பிரபலமான நிறுவனங்களின் தலைவர்களாக இருக்கும் வேளையில் இந்த பட்டியலில் புதிதாக ராஜீவ் அய்யங்கார் என்பவர் இணைந்துள்ளார். யார் இவர்..? இவர் போட்ட ட்வீட் இப்போ செம டிரெண்டிங்.
அமெரிக்க நிறுவனங்கள் தேடி தேடி இந்தியர்களை நியமிக்க பல காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் ஆசியாவையும், இந்தியாவையும் முக்கிய வர்த்தக டார்கெட் ஆக நிர்ணயம் செய்யும் போது இந்தியர்களை தேடி தேடி நியமிப்பது வழக்கம்.

இல்லையெனில் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு விகித்தவர் இந்தியராக இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே இருந்து சிஇஓ வெளியேறும் பட்சத்தில் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் மிகவும் அரிதாக ஒரு சில நிறுவனத்தில் இவ்விரு காரணங்கள் இல்லாமல் நியமிக்கப்படுவார்கள். இதேபோல் நியமிக்கப்படும் அனைத்து இந்தியர்களும் அந்த பதவிக்கு முற்றிலும் தகுதியானவர்கள் என்பதில் 0.01 சதவீதம் கூட சந்தேகம் இல்லை.
இந்த நிலையில் Product Hunt என்னும் நிறுவனத்தின் சிஇஓ-வாக ராஜீவ் அய்யங்கார் நியமிக்கப்பட்டு உள்ளது. ராஜீவ் நியமனம் குறித்து ஒருவர் டிவிட்டரில் அமெரிக்காவில் அடுத்த இந்திய சிஇஓ, பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது என ட்வீட் செய்ய அதற்கு பதில் அளித்த ராஜீவ், இதை கேட்ட இனிமையாக இருந்தாலும் நான் 50 சதவீதம் பிலிப்பைன்ஸ் வம்சாவளியை சேர்ந்தவன் என தெரிவித்தார்.

ராஜீவ் பிறந்து வளர்ந்தது கலிபோர்னியா-வின் மெலனோ பார்க் தான், இவருடைய தந்தை இந்தியர், தாய் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர். பிரின்ஸ்டன் கல்லூரியில் பயோ இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்று, யாஹூ, ஃபேர்சையில்டு நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இதை தொடர்ந்து Tandem என்னும் விர்ச்சுவல் ஆஃபீஸ் ஆஃப் நிறுவனத்தை உருவாக்கினார்.
2014ல் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றிய போது Product Hunt நிறுவனம் குறித்து கேட்டதாகவும், அதன் பின்பு சில மாதத்தில் பணியை விடுத்து social wine app-ஐ Product Hunt உருவாக்கியது முதல் இப்பயணம் துவங்கி தற்போது சிஇஓ-வாக உயர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications