இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே மிகப் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.7,98,800 கோடியாகும். முகேஷ் அம்பானியும் அவரது கூட்டாளிகளும் இந்தியாவின் முக்கியப் பணக்காரர்களான ரஸ்ஸல் மேத்தா, விரென் மெர்ச்சண்ட் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றனர்.
முகேஷ் அம்பானிக்கும் போத்தார் குடும்பத்துக்கும் கூட ஒரு தூரத்து தொடர்பு உள்ளது. இந்தக் குடும்பமும் நாட்டின் பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகும். போர்ப்ஸ் தகவல்படி அரவிந்த் போத்தார் மற்றும் அவரது குடும்பச் சொத்தின் நிகர மதிப்பு ரூ.30,351 கோடியாகும்.

அதுசரி இவருக்கும் அம்பானிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். இருக்கிறது.
அரவிந்த் போத்தாரின் மகன் ராஜிவ் போத்தார், மனோஜ் மோடியின் மகளை திருமணம் செய்துள்ளார். மனோஜ் மோடி முகேஷ் அம்பானியின் வலதுகரமாக இருப்பவர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய முடிவுகளில் இவருக்கும் பங்குண்டு.
மனோஜ் மோடிக்கு பரிசாக தனது அன்டிலியா இல்லத்துக்கு அருகே ரூ.1500 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கித்தந்துள்ளார் முகேஷ் அம்பானி. அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமானவர்கள்.
அரவிந்த் போத்தார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானது தான் பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ். இந்த நிறுவனம் விவசாயம், சுரங்கம் மற்றும் கட்டுமானத்துக்குத் தேவையான வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அரவிந்த் போத்தார் இருக்கின்றார்.
அவரது மகன் ராஜிவ் போத்தார் இணை நிர்வாக இயக்குநராக உள்ளார். மனோஜ் மோடியின் மகளும் ராஜிவ் போத்தாரின் மனைவியுமான குஷ்பூ போத்தாரும் இணை நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.
1951 ஆம் ஆண்டில் பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் தொடங்கப்பட்டு முதலில் டயர் தயாரிப்பில் இறங்கியது. இதை தொடர்ந்து 1963இல் முதல் சைக்கிளை தயாரித்தது. 1990இல் இருந்து ஆப் ரோடு டயர் தயாரிப்பைத் தொடங்கி ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
போர்ப்ஸ் பட்டியல்படி இந்தியாவில் 59ஆவது பணக்காரராக அரவிந்த் போத்தார் உள்ளார். 2021 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் வேளாண் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் டயர்கள் உற்பத்தி ஆலையை பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் புதிதாகத் தொடங்கியது.


Click it and Unblock the Notifications