பாதுகாப்பு துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த, ராணுவ உபகரணங்களை உற்பத்தி திறனை அதிகரிக்க மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 2 பாதுகாப்பு தளங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் பாதுகாப்பு வழித்தடத்தில் சென்னை, கோயம்புத்தூர்,ஓசூர்,சேலம், திருச்சி ஆகிய 5 இடங்களில் தொழில்முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் உத்தர பிரதேசத்தில் ஆக்ரா, அலிகார், சித்ரகூட், ஜான்சி, கான்பூர், லக்னோ உள்ளிட்ட நகரங்களில் தொழில்முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழித்தடங்களிலும் பாதுகாப்பு தொழில் ஆலைகள் நிறுவுவதற்காக 250க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ஏரோ இந்தியாவின் 15வது எடிஷன் பெங்களூருவில் உள்ள யலஹங்கா விமானப்படை நிலையத்தில் நடைபெற்று வருகிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கட்கிழமை தொடங்கி வைத்த இந்த கண்காட்சி மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது.
ஏரோ இந்தியா 2025ல் நடந்த தலைமை நிர்வாக அதிகாரியின் வட்டமேசை மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இரண்டு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களை நிறுவியுள்ளோம். இந்த வழித்தடங்களில் தொழில்துறை ஆலைகளை நிறுவுவதற்காக 250க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
புதிய பாதுகாப்பு உற்பத்தி ஆலைகள் தொடங்குவதற்காக புதிய உரிமம் கோரும் நிறுவனங்களுக்கு ஆட்டோமேடிக் வழிமுறையில் 75 சதவீதம் வரை அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்க ஒப்புதல் வழியின்கீழ், 100 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த வகையில், 46 கூட்டு வர்த்தகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு முதலீட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடியின தொலைநோக்குத் தலைமையின்கீழ், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை வலுப்படுத்த ஏராளமான முயற்சிகள் நாங்கள் எடுத்துள்ளோம்.
வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில், பாதுகாப்பு எக்ஸிம் போர்டல் ஏற்றுமதி அங்கீகார செயல்முறையை தடையின்றி செய்துள்ளது. 2013-14ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் ராணுவ பொருட்களின் ஏற்றுமதியில் நம் நாடு 31 மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது. இது ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதி மையமாக இந்தியா உருவெடுத்தற்கான சான்றாகும் என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications