டெல்லி: இன்று இந்திய பாதுகாப்புத் துறைக்கு மிகவும் முக்கியமான நாள் என்று சொன்னால் மிகையில்லை, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் குழு (DAC), முப்படைகளின் பலத்தை அதிகரிக்க ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பிலான 10 ராணுவ உபகரணங்கள், தடவாளங்கள் கையகப்படுத்தும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்கள், தடவாளங்கள் கொள்முதலில் சுமார் 99 சதவீதம் Buy India, Make Indian கொள்கையில் வாங்கப்பட உள்ளது. அதாவது இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டதும், இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படும் பொருட்களை வாங்கப்பட உள்ளதாக [(Buy (Indian) and Buy (lndian-Indigenously Designed Developed and Manufactured)] பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.

இந்திய இராணுவத்தின் டேங்கர் படையை நவீனமயமாக்குவதற்காக, எதிர்கால தயார் நிலை போர் வாகனங்கள் (FRCV) வாங்கும் திட்டத்திற்குப் பாதுகாப்பு கையகப்படுத்துதல் குழு (DAC) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. FRCV என்பது மேம்பட்ட திறன் கொண்ட அனைத்து நிலப்பரப்பு இயக்கும் பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட டேங்கர் ஆகும்.
வான் தாக்குதலில் இலக்கை கண்டறிந்து கண்காணித்துத் திரும்பத் தாக்கும் Air Defence Fire Control Radars வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உபகரணம் Armoured Vehicles Nigam Limited வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கடற்படையைப் பாதுகாப்பதற்காக அடுத்த தலைமுறை வேகமாக கண்காணிப்பு விமானமான Dornier-228 aircraft வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விமானம் மூலம் நீண்ட தூரத்திற்குப் பறந்து கடற்படையால் கண்காணிக்க முடியும்.
இப்படி இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டதும், இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படும் பொருட்களை சுமார் 1.45 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்குவது மூலம் இந்தியாவில் இருக்கும் பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் பலன் அளிக்கும். குறிப்பாகப் பங்குச்சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் இந்த திட்டத்தைப் பெற்று இருந்தால் பெரிய அளவிலான நன்மையை முதலீட்டாளர்களும் பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications