மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) இன்று 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ஆயுதங்கள், ஆயுத அமைப்புகள் மற்றும் தளங்களை வாங்குவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா பாதுக்காப்பு துறையை பலப்படுத்தும் அதே நேரத்தில் இந்தியாவுக்கு தேவையான ஆயுதங்களை இந்தியாவிற்குள்ளேயே தயாரிக்கும் முயற்சி முதன்மையாக வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டமும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டதுடன் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத கொள்முதல் திட்டத்தில் ஏர் டூ சர்பேஸ் பிரிவில் ஷாட் ரேஞ்ச் ஏவுகணையான Dhruvastra, 12 சு-20 MKI பைட்டர் ஜெட் விமானங்களும் அடங்குகிறது.
இன்று மாலை வெளியான அறிவிப்பின் படி மொத்தம் ஒன்பது பாதுகாப்பு துறை சார்ந்த கொள்முதல் திட்டங்களுக்கு மத்திய பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அனைத்து கொள்முதல்களும் உள்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து வாங்குதல் வாங்கப்படுபவை.

மேலும் ஆயுதங்கள் வாங்கப்படும் ஆயுதங்களும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட (IDMM) பிரிவின் கீழ் மட்டுமே வாங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் என்ற இலக்கை அடைய இந்திய பாதுகாப்புத் துறைக்கு முக்கிய படிக்கட்டாக அமைந்துள்ளது.

இந்த 45000 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கோரிக்கைகள் அடங்கிய ஆயுத கொள்முதல் திட்டத்தில் LAMV வாகனம், ISAT-S என்ற கண்காணிப்பு அமைப்பு, துப்பாக்கி பொருந்திய HMV ஆகியவை இதில் அடங்கும். இதேபோல் கடற்படைக்கு தேவையான அடுத்த தலைமுறை ரோந்து கப்பல்களும் இந்த ஒப்புதல் கீழ் வாங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications