சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 75ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ரஜினிகாந்த் திரையுலகில் கால் பதித்து 50 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் ரஜினியின் பிறந்தநாளை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் கொண்டாட்டத்தை அதிகப்படுத்தும் விதமாக அவரது பிளாக் பஸ்டர் படங்களுள் ஒன்றான படையப்பா மீண்டும் வெள்ளித்திரையில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். ரஜினிகாந்த் எது செய்தாலும் அது தலைப்பு செய்திகளாகிவிடும். தன்னுடைய செயல்களாலும் பேச்சுகளாலும் ரஜினிகாந்த் சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். அந்த வகையில் ரஜினிகாந்தும் சர்ச்சைகளையும் நம்மால் பிரிக்க முடியாது என்றே கூறலாம். ரஜினிகாந்தின் சில பேட்டிகளும் ,கருத்துகளும், செயல்களும் விவாதங்களை தூண்டி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஜெயலலிதா: 1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளாள் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என கூறினார். இந்நிலையில் 2004ஆம் ஆண்டு ஜெயலலிதாவை தைரிய லட்சுமி என புகழ்ந்தார். 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில் ரஜினியும் ஒருவர். ஜெயலலிதா மீண்டும் வீடு திரும்பியது நல்லது அவருக்காக இறைவனை வேண்டி கொள்கிறேன் என்றார்.
பணமதிப்பு நீக்கம்: கடந்த 2016ஆம் ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது. இதனை முதல் ஆளாக வரவேற்றவர் நடிகர் ரஜினிகாந்த். "புதிய இந்தியா பிறந்தது: ஜெய்ஹிந்த்" என கூறினார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைச் செயல்படுத்தியதில் சில பிழைகள் இருந்தன என ரஜினிகாந்த் கூறினார்.

பெரியார் குறித்த பேச்சு: நடிகர் ரஜினிகாந்த் 2020ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய பேச்சு சர்ச்சையானது. 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் ரஜினி தெரிவித்திருந்தார். அதை துக்ளக்கில் எழுதியபோது புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது. கூடுதல் விலைக்கு மக்கள் வாங்கினார்கள் என்று ரஜினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு எதிராக திராவிட கழக்கத்தினர் வழக்கும் தொடர்ந்தனர்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி, 2018-ம் ஆண்டு, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியின்போது, 2 பெண்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த, வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக தூத்துக்குடிக்கே சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது பொதுமக்கள் அல்ல, சமூக விரோதிகள் என்றார். அதோடு, எப்போதும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடு ஆகிவிடும் எனக் கோபமாக பேசியிருந்தார்.

ரஜினிகாந்த் இந்த பேட்டி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது., தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் ரஜினியை நேரில் ஆஜராகி விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் ரஜினி எழுத்துப்பூர்வமாக தன் விளக்கத்தை தந்த நிலையில், பொதுவெளியில் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கியது.
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது: கடந்த 2023ஆம் ஆண்டு ரஜினிகாந்த் உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அவர் சந்தித்த போது காலில் விழுந்தார். ரஜினி தன்னை விட 21 வயது இளையவரான யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, சென்னை திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது ஏன் என்ற கேள்விக்கு, "ஒரு சன்னியாசி ஆகட்டும்; ஒரு யோகி ஆகட்டும் அவர்கள் வயதில் நம்மைவிட சிறியவர்களாக இருந்தால்கூட அவர்களுடைய காலில் விழுவது என்னுடைய பழக்கம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன்'' என்றார்.

அரசியல் கட்சி: நீண்ட காலமாக ரஜினி ரசிகர்கள் இவர் எப்போது அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து இருந்தனர். அவ்வபோது ரஜினி தெரிவித்த அரசியல் கருத்துகளும் இதற்கு முக்கிய காரணம். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி உறுதி என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் அதே ஆண்டில் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி முடிவினை கைவிடுவதாக அறிவித்து ரசிகர்களை ஏமாற்றினார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications