மும்பை பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாகவே அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த நிலையில் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டனர்.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் பிக் புல் என அழைக்கப்படும் ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா ஜோடி வெறும் 1400 கோடி ரூபாய் அளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா
இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கம் கொண்ட தனிநபர் முதலீட்டாளராக இருக்கும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தனது மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலா உடன் இணைந்து பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்து மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாகியுள்ளார்.
1400 கோடி ரூபாய் நஷ்டம்
இந்நிலையில் மே மாதத்தில் மட்டும் ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா முதலீடு செய்துள்ள பல நூறு நிறுவனங்களில் அதிகப்படியான முதலீட்டை பெற்றுள்ள 3 நிறுவனங்களின் வாயிலாக மட்டும் சுமார் 1400 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளனர்.
டைட்டன் - 996 கோடி ரூபாய் இழப்பு
மார்ச் 31ஆம் தேதி நிலவரத்தின் படி ரேகா ஜூன்ஜூன்வாலா டைட்டன் நிறுவனத்தில் சுமார் 5.05 சதவீத பங்குகளை வைத்துள்ளார். திங்கட்கிழமை கணக்கின் படி இந்த 5.05 சதவீத டைட்டன் பங்குகள் மதிப்பு 10,028.96 கோடி ரூபாய், ஏப்ரல் மாதத்தில் இதன் மதிப்பு 11,025 கோடி ரூபாயாக இருந்தது. இந்தச் சரிவின் மூலம் ரேகா ஜூன்ஜூன்வாலா-வுக்கு டைட்டன் மூலம் 996 கோடி ரூபாய் இழப்பு.
ஸ்டார் ஹெல்த் - 381 கோடி ரூபாய் இழப்பு
இதேபோல் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைய்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 17.51 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இந்த நிறுவனத்தின் சந்தை முதலீட்டின் மதிப்பு 7,164.54 கோடி ரூபாயில் இருந்து 6,789.62 ரூபாயாகச் சரிந்துள்ளது. இதன் மூலம் 381 கோடி ரூபாய் இழப்பு.
மெட்ரோ பிராண்ட்ஸ் - 47 கோடி ரூபாய் இழப்பு
இதேபோல் ரேகா ஜூன்ஜூன்வாலா மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தில் 14.43 சதவீத பங்குகளை வைத்துள்ளார். கடந்த 30 நாட்களில் 2238.26 கோடி ரூபாயாக இருந்த சந்தை மதிப்பு 2,191.64 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. இதன் மூலம் 47 கோடி ரூபாய் இழப்பு.
பங்குச்சந்தை
இப்படி ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா முதலீடு செய்துள்ள டாப் 3 நிறுவனங்களில் அதாவது டைட்டன், ஸ்டார் ஹெல்த், மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் வாயிலாக 1400 கோடி ரூபாய் அளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளனர். ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா போன்ற பெரும் தலைகளுக்கே இந்த நிலைமை என்றால் சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களின் நிலைமை என்ன..?
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications